Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவின் ஆக்ஸிஜனுக்காக பிரிட்லீ நிதி உதவி

இந்தியாவின் ஆக்ஸிஜனுக்காக பிரிட்லீ  நிதி உதவி
, செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (22:56 IST)
பிரபல ஆஸ்திரேலிய வீரர் ஆக்ஸிஜன் தேவையைப் பூர்த்தி செய்ய ரூ.43 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார்.
 

உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவிவருகிறது. இந்தியாவிலும் இந்தத் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. இதைக்குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இந்நிலையில் கொரொனா பரவலைக் கடுப்படுத்த மக்கள் கூடும் பொது இடங்களில் அரசு பாதுகாப்பு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரொனா பரவல் தீவிரம் அடைந்துள்ளதால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. டெல்லியில் உள்ள ஜெய்ப்பூர் கோல்டன் ஹாஸ்பிடலில்  ஆக்ஸிஜன் பற்றாகுறையால் நோயாளிகள் 20 பேர் பலியாகினர். மேலும் கொரோனா இரண்டாவது அலையில் 54.5 சதவீதம் பேருக்கு ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது.

இந்நிலையில் நேற்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பாட் கம்மின்ஸ் இந்தியாவின் ஆக்ஸிஜன் தேவையைப் பூர்த்தி செய்ய 50,000 டாலர் நிதியுதவி செய்துள்ளார்.  இந்த 50,000 (ரூ.40 லட்சம் 0டாலர் நிதியை பிரதமரின் கொரோனா நிவாரண நிதியுதவி திட்டத்திற்காக பாட் கம்மின்ஸ் அளித்துள்ளார்.

அதேபோல் இன்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிரிட்லீ ரூ.43 லட்சம் இந்தியாவின் ஆக்ஸிஜன் தேவையைப் பூர்த்தி செய்ய நிதி உதவி அளித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறும்போது, இந்தியாவுடன் எனக்கு மிக நெருங்கிய தொடர்பு உள்ளது என கூறி மக்களின் மனதில் இடம்பிடித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெல்லி அணிக்கு 172 இலக்கு கொடுத்த பெங்களூரு