Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கேப்டன் தோனிக்கு உருக்கமாக கடிதம் எழுதிய ரசிகர்...சமூக வலைதளத்தில் வைரல்

Advertiesment
dhoni letter
, வியாழன், 19 மே 2022 (17:27 IST)
சென்னை கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு அவரது ரசிகர்  ஒருவர் எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த ஐபிஎல்  தொடரில் 4 வது முறையாக சேம்பியன் கோப்பை வென்ற சென்னை கிங்ஸ் அணி  நடப்பு தொடரில் மோசமாக விளையாடி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை.  இது ரசிகர்கள் இடையே ஏமாற்றை உண்டாக்கியது.

இந்த தொடரில் 13 போட்டிகளில்  விளையாடி 3 போட்டிகளில் மட்டுமே வென்ற்உ 9 வது இடத்திலுள்ளது.

இந்த ஆண்டு புதிய கேப்டனாக ஜடேஜா பொறுப்பேற்ற நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்தார்.அதனால் தோனி மீண்டும் கேப்டன் பொறுப்பு ஏற்றுள்ளார்.

இந்த நிலையில் சென்னை அணி தொடரில் இருந்து வெளியேறியதால், சென்னை அணி கேப்டன் தோனிக்கு ஒரு ரசிகர் கடிதம் எழுதியுள்ளளார். அதில், நீங்கள் சிறப்பாக விளையாடும்போது, நான் சிறப்பாக விளையாடுபயதுபோல் உணர்கிறேன். நீங்கள் தோல்வி அடையும்போது நானும் தோற்கிறேன்.   நீங்கள் உணர்ச்சியை காட்ட மாட்டீர்கள் ஆனால், உங்கள் ஒவ்வொரு போட்டியிலும், சிரிக்கிறேன், அழுகிறேன், வெற்றியை கொண்டாடுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
webdunia

மேலும், தோனி என்ற மனிதர் எனக்கு நிறைய கற்றுத்தந்திருக்கிறீர். 1 வயதாகும்ம்போது,  நீங்கள் ஒரு நேர்காணலில்  பேசியதை நினைவில் வைத்திருக்கிறேன். அதில், அடக்கமாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டும். அவமானங்களை தாங்கிக்கொண்டு சாகசத்தை எதிர்கொள்வது நம் வெற்றிக்கு வழிகாட்டும் என்பதைக் கற்றுக்கொண்டேன். உங்களைப் போல் யாரும் இல்லை என்று அந்தக் கடிதத்தில் உருக்கத்துடன் எழுதியுள்ளார்.
இந்த கடிதத்தைப் படித்த தோனி,  நீங்கள் சிறப்பாக கடிதம் எழுதியுள்ளீர்கள் என பாராட்டி, கையெழுத்துள்ளார்.  

இந்தக் கடிதத்தை சென்னை அணி நிர்வாகம் பிரேம் செய்துள்ளது  குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலிவுட்டில் நடிகராக அறிமுகமாகும் இந்திய கிரிக்கெட் வீரர்!