Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோகித்துக்கு தோல்வியை கொடுத்ததோடு, சாதனையையும் பிடிங்கிய ராகுல்!

Webdunia
திங்கள், 25 ஏப்ரல் 2022 (10:20 IST)
ஐபிஎல் போட்டியில் அதிக சதமடித்த இந்தியர் பட்டியலில் ரோகித் சர்மா சாதனையை சமன் செய்தார் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் கே.எல்.ராகுல். 

 
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்: 
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்திருந்தது.
 
இதனை அடுத்து 169 என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இது லக்னோ அணி பெறும் 5வது வெற்றியாகும். மும்பை அணி தொடர்ந்து 8வது தோல்வியை சந்தித்துள்ளது.
கேப்டன் கே.எல்.ராகுல் புது சாதனை: 
ஐபிஎல் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த இந்தியர்கள் பட்டியலில் முதலில் இருந்த ரோகித் சர்மா சாதனையை லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் நேற்றைய போட்டியில் சமன் செய்தார். இருவரும் தலா 6 சதங்கள் அடித்துள்ளனர்.
 
இவர்களைத் தொடர்ந்து விராட் கோலி 5 சதமும், சுரேஷ் ரெய்னா 4 சதமும் அடித்துள்ளனர். நேற்றைய போட்டியில் கேப்டன் கே.எல்.ராகுல் 62 பந்துகளில் 12 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 103 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து ஒயிட்வாஷ் ஆகும்: மெக்கரெத் எச்சரிக்கை..!

சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறுகிறாரா அஸ்வின்? பரபரப்பு தகவல்..!

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கோலியின் அண்மைய புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சர்யம்!

ஐபிஎல் தொடரில் கலக்கிய க்ருனாள் பாண்ட்யாவுக்கு ஆசியக் கோப்பை தொடரில் வாய்ப்பா?

பாலியல் வழக்கில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கைது.. அணியில் இருந்தும் சஸ்பெண்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments