Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் பலப்பரிட்சை

Advertiesment
ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் பலப்பரிட்சை
, சனி, 16 மே 2015 (12:34 IST)
இன்று மொகாலியில் நடைபெறும் லீக் ஆட்டத்தில்,  சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகள் களத்தில் மோதவுள்ளன.
 
8 ஆவது ஐபிஎல் போட்டிகள் இந்தியா முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகள் பலப்பரிட்சை நடத்தவுள்ளன.
சென்னை அணி கடந்த ஆட்டத்தில் படுதோல்வி அடைந்துள்ளதால், அதிலிருந்து மீள கடுமையாக போராடும். அணியில் மெக்கல்லம், ஸ்மித், ரெய்னா ஆகியோர் நிலைத்துவிட்டால் எதிரணிக்கு பெரும் சவாலாகிவிடும். சென்னை அணி இதுவரை 8 வெற்றி, 5 தோல்வி என 16 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது.
 
பஞ்சாப் அணி பிளேஆப் வாய்ப்பை இழந்து விட்டதால் இந்த ஆட்டத்தை வெற்றியுடன் முடிக்க எண்ணலாம். ஏற்கனவே சென்னையிடம் தோல்வி கண்டுள்ளதால், களத்தில் பழிதீர்க்குமா என்பதை பொறுத்திருந்துதான் காண வேண்டும். இதுவரை 3 வெற்றி, 10 தோல்வி என 6 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது பஞ்சாப் அணி.

Share this Story:

Follow Webdunia tamil