நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தோல்வி குறித்து குமுறுகிறார் கேப்டன் கோலி.
8 ஆவது ஐபிஎல் போட்டியில் நேற்றைய லீக் ஆட்டத்தில் பஞ்சாப் - பெங்களூர் அணிகள் மோதின. இதில் மழை குறுக்கீடு காரணமாக ஆட்டம் 10 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 106 ரன்களை சேகரித்தது. இதைத்தொடர்ந்து விளையாடிய பெங்களூர் அணி 84 ரன்கள் மட்டுமே எடுத்ததால், பஞ்சாப் அணி 22 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் தோல்வி குறித்து கேப்டன் கோலி கூறுகையில், நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் வீரர்களின் ஆட்டதிறன் மிக அற்புதமாக இருந்தது. குறிப்பாக அவர்களின் பந்து வீச்சு களத்தில் எடுபட்டதால், பஞ்சாப் வீரர்களுக்கு அது சாதகமாய் அமைந்தது. மேலும் மூன்று ஓவரை நாங்கள் சரியாக கையாளவில்லை. இதனை பஞ்சாப் வீரர்கள் சரியாக பயன்படுத்திகொண்டனர் என்றார்.