Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரவீண் குமார் ஹேட்ரிக்; ராஜஸ்தான் அணி 92 ஆல் அவுட்

Advertiesment
பிரவீண் குமார் ஹேட்ரிக்
, வியாழன், 18 மார்ச் 2010 (21:48 IST)
பெங்களூரில் நடைபெறும் இன்றைய ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் பந்து வீச்சாளர் பிரவீண் குமார் ஹேட்ரிக் சாதனை புரிந்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 92 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

யூசுஃப் பத்தான் மட்டுமே திணறினாலும் 2 சிக்சர்களுடன் அதிகபட்சமாக 26 ரன்கள் எடுத்தார்.

ஆட்டத்தின் 17-வது ஓவர் திருப்பு முனையாக அமைந்தது. பிரவீண் குமார் வீசிய முதல் பந்து வைடாக அமைந்தது. இரண்டாவது பந்தை மார்டின் பவுண்டரி அடித்தார். தனது 23வது பந்தில் முதல் பவுண்டரியை அடித்த மார்டின் அடுத்த பந்தில் 19 ரன்கள் எடுத்திருந்தபோது பிரவீண் குமார் பந்தில் பௌல்டு ஆகி ஹேட்ரிக்கைத் துவங்கி வைத்தார்.

அடுத்த பந்தில் நார்வால் பவுன்சரை புல் செய்ய முயன்று மணீஷ் பாண்டேயிடம் கேட்ச் கொடுத்தார்.

அடுத்த பந்தில் தோக்ரா பவுல்டு ஆக பிரவீண் குமார் 2010 ஐ.பி.எல். கிரிக்கெட்டில் முதல் ஹேட்ரிக் சாதனை படைத்தார்.

எல்.பாலாஜி, அமித் மிஷ்ரா, யுவ்ராஜ் சிங் (இரு முறை), ரோஹித் ஷர்மா, மகாயா நிடினி ஆகியோருக்கு பிறகு இன்று பிரவீண் குமார் ஹேட்ரிக் சாதனை புரிந்தார்.

ஜாக் காலிஸும், டேல் ஸ்டெய்னும் ஷாட் பிட்ச் பந்து வீசி பேட்ச்மென்களைக் கட்டுப்படுத்தினர். அனில் கும்ளே 3.5 ஓவர்கள் வீசி 9 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பிரவீண் குமார் 4 ஓவர்களில் 18 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

காலிஸ் 4 ஓவர்கள் வீசி 20 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

அடுத்து பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் 93 ரன்கள் என்ற எளிதான இலக்கைத் துரத்தக் களமிறங்கவுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil