யாருமே தோற்க விரும்புவதில்லை…. எல்லோரும் வெற்றியாளராக ஆவதில்லை – தோனி மனைவி தத்துவப் பதிவு!

Webdunia
திங்கள், 26 அக்டோபர் 2020 (17:57 IST)
சிஎஸ்கே அணியின் மோசமான தோல்வி குறித்து அந்த அணி கேப்டன் தோனியின் மனைவி சாக்‌ஷி பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு சிஎஸ்கே அணிக்கு ஐபிஎல் தொடர் மிக மோசமாக அமைந்துள்ளது. தொடரில் இருந்து வெளியேறும் முதல் அணியாக சிஎஸ்கே உள்ளது. இந்த தோல்வியால் சிஎஸ்கே அணியின் கேப்டன் மற்றும் வீரர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தோனியின் மனைவி சாக்‌ஷி தனது சமூகவலைதளப் பக்கத்தில் ‘விளையாட்டில் ஒரு நாள் நீங்கள் வெல்வீர்கள், இன்னொரு நாள் தோற்பீர்கள்.  இத்தனை ஆண்டுகளில் நிறைய வெற்றிகளும் சில வேதனையான தோல்விகளும் சாட்சிகளாக உள்ளன. அதில் வெற்றியைக் கொண்டாடுகிறோம். தோல்விகளால் மனம் உடைந்து போகிறோம். யாரும் தோற்க விரும்புவதில்லை. அனைவராலும் வெற்றியாளர்களாக முடியாது. உண்மையான போராளிகள் போராடப் பிறக்கிறார்கள். நம் மனத்தில் அவர்கள் எப்போதும் சூப்பர் கிங்ஸ்களாக இருப்பார்கள்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்வதேச டி20 லீக் தொடர்: சாம் கரண் தலைமையிலான அணி அபார வெற்றி..

ஐபிஎல் தொடரில் தமிழக வீரர் சாய் சுதர்சன் விளையாடுவது சந்தேகமா? என்ன நடந்தது?

வங்கதேச வீரர் ஐபிஎல் போட்டியில் விளையாட அனுமதி இல்லையா? பிசிசிஐ கூறுவது என்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்க மறுப்பு: ஆஸ்திரேலிய வீரர் கூறிய காரணம்..!

50 ஓவர் ஒருநாள் போட்டிகள் இனி நடக்குமா? சந்தேகம் தெரிவித்த அஸ்வின்

அடுத்த கட்டுரையில்
Show comments