Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித் ஷர்மாவின் காயம் எதிர்பார்த்தை விடத் தீவிரமானது – அதிர்ச்சி செய்தி!

Webdunia
வியாழன், 29 அக்டோபர் 2020 (08:58 IST)
இந்திய அணியின் துணை கேப்டனும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமான ரோஹித் ஷர்மாவுக்கு ஏற்பட்டுள்ள காயம் தீவிரமானது என செய்திகள் வெளியாகியுள்ளன.

நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இந்த மூன்று அணிகளிலுமே இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா இடம்பெறவில்லை. அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் இடம்பெறவில்லை என சொல்லப்பட்டது.

ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியினரோ ரோஹித் ஷர்மா வலைப்பயிற்சியில் ஈடுபடுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இதனால் அவருக்கு என்ன காயம் என்பது குறித்து தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை. இதைக் குறிப்பிட்டு பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸகர் ‘ரோஹித்தின் காயம் குறித்த வெளிப்படையான தகவல் அளிக்கப்பட வேண்டும். காயம் தீவிரமாக இருந்திருந்தால் அவர் பயிற்சி மேற்கொள்வதில் திணறியிருப்பார். ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை. பின்னர் ஏன் அவர் இந்திய அணியில் இடம்பெறவில்லை?’ எனக் கேள்வி எழும்பியுள்ளது.

இந்நிலையில் ரோஹித்துக்கு ஏற்பட்டுள்ள காயம் ஏ கிரேடு 1 காயம் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது குணமடைய 4 முதல் 6 வாரங்கள் தேவைப்படும். இந்த காயம் நாம் நினைப்பதை விட கூடுதலானது. இதனால் ரோஹித் ஷர்மா எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐதராபாத் - ராஜஸ்தான் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் விவரங்கள்..!

தல நல்லாருக்கியா தல..? தோனியை ஓடிச்சென்று கட்டிப்பிடித்த ஹர்திக் பாண்ட்யா! Viral Video!

செல்லத்த காட்டாம ஏமாத்திட்டீங்களே! திஷாவின் கவர்ச்சி டான்ஸை கட் செய்த ஐபிஎல்! - சோகத்தில் ரசிகர்கள்!

முதல் போட்டியில ஜெயிச்சதா வரலாறே இல்ல.. சேப்பாக்கம் வேற! - CSK vs MI போட்டியில் வெல்லப்போவது யார்?

ஐபிஎல் 2025 முதல் போட்டி: டாஸ் வென்ற பெங்களூரு எடுத்த அதிரடி முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments