Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2020; சென்னை அணிக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கொல்கத்தா

Webdunia
புதன், 7 அக்டோபர் 2020 (21:50 IST)
ஐபிஎல் தொடர் தொடங்கி இப்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இரு அணிகளும் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற சூழ்நிலையில் ஆட உள்ளன. இதனால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்நிலையில் சற்று முன்னர் டாஸ் போடப்பட்ட நிலையில் கொல்கத்தா டாஸ் வென்று பேட்டிங்  தேர்வு செய்தது.

இதில், முதலில் ஆடிய கொல்கத்தா அணியில் ஆடிய பேட்ஸ் மேன்கள் சோபிக்கவில்லை; பின்னர் ஆடிய ராகுல் திரிபாஹ்டி அரை சதம் அடித்து விளாசினார்.

ஷூப்மான் கில் 11 ரன்கள் , ரனா 9 ரன்கள், சுனில் நரைன் 17 ரன்கள், மார்கன் 7 ரன்கள் ஆண்ட்ரெ ரசல் 2 ரன்கள் எடுத்தனர்.இந்த அணி 20 ஓவர்கள்  முடிவில் 167 ரன்கள் எடுத்தது. 
இதையடுத்து பேட்டிங் செய்யவுள்ள சென்னை அணிக்கு 168 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

சென்னை அணி சார்பில் பிராவோ 3 விக்கெட்டுகளும், ஷர்மா , ஷர்துல் தாக்குர் ,சாம் கரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி நாளில் சிராஜுக்கு உத்வேகம் அளித்த ரொனால்டோவின் வால்பேப்பர்…!

வெற்றி தோல்வி சகஜம்… ஆனா சரணடைய மாட்டோம்… கம்பீர் பேச்சு!

சிராஜுக்காக நான் சந்தோஷப்படுகிறேன்.. விராட் கோலி நெகிழ்ச்சி!

நான் ஏன் ஐபிஎல் விளையாடுவதில்லை… தோனியை நக்கல் செய்தாரா டிவில்லியர்ஸ்?

ஓவல் டெஸ்ட்… கடைசி நாளில் பவுலர்கள் செய்த மேஜிக்… இந்திய அணி த்ரில் வெற்றி!

அடுத்த கட்டுரையில்
Show comments