இந்திய அணியில் சூர்யக்குமார் யாதவ் ஏன் இல்லை? சமூகவலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி!

Webdunia
செவ்வாய், 27 அக்டோபர் 2020 (17:14 IST)

ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் சூர்யக்குமார் யாதவ்வுக்கு இடம் அளிக்கப்படாதது குறித்து ஹர்பஜன் சிங் வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணிக்காக வீரர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். இதில் வருண் சக்கரவர்த்தி, சஞ்சு சாம்சன், முகமது சிராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் மும்பையை சேர்ந்த சூர்யகுமார் தேர்வு செய்யப்படாதது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுபற்றி சமூகவலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

அதில் ‘ லிமிடெட் ஓவர் போட்டிகளில் இந்திய அணிக்கு அவசியம் தேர்வு செய்யப்பட வேண்டியவர் சூர்யகுமார் யாதவ். ஐபிஎல் மற்றும் டொமஸ்டிக் போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடி வருகிறார். ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு விதமான விதிமுறை என நினைக்கிறேன்.பிசிசிஐ தேர்வுக் குழுவினர் தயவுசெய்து சூர்யகுமார் யாதவின் சாதனைகளைப் கவனிக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோமாவுக்கு சென்ற பிரபல கிரிக்கெட் வீரர்.. நலம் பெற ஆடம் கில்கிறிஸ்ட் பிரார்த்தனை..!

5-0.. இலங்கை அணியை ஒயிட்வாஷ் செய்தது இந்திய மகளிரணி! இது இந்திய அணியின் 3வது ஒயிட்வாஷ்..!

பயிற்சியாளர் பதவியில் இருந்து கெளதம் காம்பீர் நீக்கமா? பிசிசிஐ விளக்கம்..!

ஒரே டி20 போட்டியில் 7 ரன்கள் கொடுத்து 8 விக்கெட்டுக்கள்.. உலக சாதனை செய்த பெளலர்..!

4வது டி20 போட்டியிலும் இந்திய மகளிர் அணி வெற்றி.. இலங்கையை ஒயிட் வாஷ் செய்ய வாய்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments