Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2021 ஆம் ஆண்டிலும் தோனிதான் சிஎஸ்கே கேப்டன் – அடித்து சொல்லும் கம்பீர்!

Webdunia
வியாழன், 29 அக்டோபர் 2020 (16:19 IST)
சிஎஸ்கே மோசமான தோல்விகளைப் பெற்று வரும் நிலையில் அடுத்த ஆண்டு அவர் கேப்டன் பொறுப்பில் நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது.

அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ப்ளே ஆஃப் தகுதியை இழந்த முதல் அணியாக சிஎஸ்கே மாறியுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு தோல்விக்கு கேப்டன் தோனியின் போதாமையே காரணம் என சமூக வலைதளங்களில் பேசிக்கொள்ளப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டு அணி கேப்டன் மாற்றப்படலாம் என்ற பேச்சு எழுந்தது.

இதற்கு பதிலளித்துள்ள சிஎஸ்கே தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் “சிஎஸ்கே அணிக்கு இது ஒரு சிறிய அளவிலான பாதிப்புதான். தொடரும் காலங்களில் சிஎஸ்கே சிறப்பாக விளையாடும் என்ற நம்பிக்கை உள்ளது. அணி கேப்டனை மாற்றுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை, அடுத்த ஆண்டும் கேப்டனாக தோனியே தொடர்வதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது” என கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள பாஜக எம் பியும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கவ்தம் கம்பீர் ‘2021 ஆம் ஆண்டும் தோனிதான் சிஎஸ்கே கேப்டன் என சொன்னால் நான் ஆச்சர்யப்படமாட்டேன். ஏனென்றால் தோனிக்கு அணி நிர்வாகத்துக்கும் இடையே புரிதல் உள்ளது. அவருக்கு முழு சுதந்திரத்தை அவர்கள் அளித்துள்ளனர்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உள்ளே வந்த பதிரானா.. யோசிக்காம பவுலிங் எடுத்த ருதுராஜ்! - CSK vs RCB ப்ளேயிங் 11 நிலவரம்!

பெங்களூர் பங்காளிகளுக்கு பாயாசத்த போட்ற வேண்டியதுதான்! - சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ வைரல்!

போன சீசனில் பறிபோன ப்ளே ஆஃப் வாய்ப்பு! பழிதீர்க்குமா சிஎஸ்கே? - இன்று CSK vs RCB மோதல்!

கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு சம்பளக் குறைப்பா?... பிசிசிஐ எடுத்த முடிவு!

இங்கிலாந்து தொடருக்கான அணிக்குக் கேப்டன் அவர்தான்… பிசிசிஐ எடுத்த முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments