Publish Date: Sun, 15 Nov 2020 (18:47 IST)
Updated Date: Sun, 15 Nov 2020 (18:56 IST)
ஆர் சி பி அணியின் இளம் வீரர் தேவ்தத் படிக்கல்லை வாழ்த்தி குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார் டிவில்லியர்ஸ்.
இந்த ஐபிஎல் சீசனில் கவனம் ஈர்த்த இளம் வீரர்களில் ஒருவர் ஆர் சி பி அணியின் தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல். இவர் தனது அறிமுக சீசனிலேயே 15 போட்டிகளில் 473 ரன்கள் சேர்த்து எமர்ஜிங் பிளேயர் விருதை பெற்றுள்ளார். இந்நிலையில் தனது அணியில் ஜாம்பவான் பேட்ஸ்மேன்களான கோலி மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோரோடு விளையாடியது குறித்து அவர் பேசியுள்ளார்.
அதில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் நான் சிறப்பாக விளையாடி 70 ரன்கள் சேர்த்தேன். அந்த போட்டிக்கு பிறகு டிவில்லியர்ஸ் நீங்கள் சிறப்பாக விளையாடுகிறீர்கள். தொடர்ந்து இதே போல உங்கள் ஆட்டத்தை அனுபவித்து டெலிவர் செய்யுங்கள் என மெஸேஜ் அனுப்பியிருந்தார் எனத் தெரிவித்துள்ளார்.