Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதே அணியோடு வந்து தோனி சாதித்துக் காட்டுவார் – ஓவர் கான்பிடன்ஸில் நெக்ரா!

Webdunia
வெள்ளி, 30 அக்டோபர் 2020 (16:49 IST)
சிஎஸ்கே அணியில் அடுத்த ஆண்டு மிகப்பெரிய மாற்றம் இருக்காது என ஆஷிஷ் நெக்ரா தெரிவித்துள்ளார்.

அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ப்ளே ஆஃப் தகுதியை இழந்த முதல் அணியாக சிஎஸ்கே மாறியுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு தோல்விக்கு கேப்டன் தோனியின் போதாமையே காரணம் என சமூக வலைதளங்களில் பேசிக்கொள்ளப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டு அணி கேப்டன் மாற்றப்படலாம் என்ற பேச்சு எழுந்தது. ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாதது இதுவே முதல்முறை.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் ‘அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணியில் பெரிய மாற்றம் தேவை இருக்காது. இதே அணியோடு வந்து தோனி சாதித்துக் காட்டுவார். ஐபிஎல் தொடரில் நான் 39 வயது வரை விளையாடினேன். நான் ஒரு வேகப்பந்துவீச்சாளர். நானே 39 வயது வரை விளையாட முடிந்தது. அடுத்த ஆண்டு வாட்சன் கூட இருக்க முடியும். இந்த ஒரு சீசனை வைத்து எடைபோட முடியாது. அடுத்த சீசனில் இதே பழைய சிஎஸ்கே திரும்ப வருவார்கள்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அது என்னுடைய இயல்பான கொண்டாட்ட முறை… மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் -. பாகிஸ்தான் வீரர் அப்ரார்!

கோலியின் கேரியர் சிறந்த முடிவை எட்ட அது நடக்கவேண்டும் – டிவில்லியர்ஸ் ஆசை!

நியுசிலாந்து அணிக்குப் பின்னடைவு… இறுதிப் போட்டியில் முக்கிய வீரர் விளையாடுவது சந்தேகம்!

சாம்பியன்ஸ் கோப்பைதான் கடைசி… ரோஹித் ஷர்மாவிடம் இருந்து கேப்டன்சி பறிப்பா?

இறுதிப் போட்டியில் மோதும் இந்தியா & நியுசிலாந்து… இரு அணிகளும் பயணம் செய்த தூரம் எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments