Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற பஞ்சாப்: இன்னொரு வெற்றி பெங்களூருக்கு கிடைக்குமா?

Webdunia
புதன், 24 ஏப்ரல் 2019 (19:52 IST)
விராத் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணி தொடர்ச்சியாக ஏழு போட்டிகளில் தோல்வி அடைந்தாலும் சென்னை அணிக்கு எதிரான போட்டி உள்பட மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதால் அடுத்த சுற்றுக்கு செல்ல ஒரு நம்பிக்கையுடன் உள்ளது. இந்த நிலையில் இன்று பெங்களூரு அணி, பஞ்சாப் அணியுடன் மோதவுள்ளது
 
பெங்களூரு மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனால் இன்னும் சில நிமிடங்களில் பெங்களூரு அணி பேட்டிங் செய்யவுள்ளது
 
இன்றைய பெங்களூர் அணியில் பார்த்தீவ் பட்டேல், விராத் கோஹ்லி, டிவில்லியர்ஸ், மொயின் அலி, ஸ்டோனிஸ், நாத், வாஷிங்டன் சுந்தர், உமேஷ் யாதவ், செளதி, சயினி, சாஹல் ஆகியோர் உள்ளனர்
 
அதேபோல் இன்றைய பஞ்சாப் அணியில் கே.எல்.ராகுல், கிறிஸ் கெயில், மயாங்க் அகர்வால், டேவிட் மில்லர், மந்தீப் சிங், நிக்கோலஸ் பூரன், அஸ்வின், அங்கிட் ராஜ்பூத், ஹார்டஸ் வில்ஜோயின், முகமது ஷமி மற்றும் எம்.அஸ்வின் ஆகியோர் உள்ளனர்.
 
இன்றைய போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றால் 8 புள்ளிகளுடன் ஒரு இடம் முன்னேறும். அதேபோல் பஞ்சாப் வெற்றி பெற்றால் 4வது இடத்தை பிடித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உள்ளே வந்த பதிரானா.. யோசிக்காம பவுலிங் எடுத்த ருதுராஜ்! - CSK vs RCB ப்ளேயிங் 11 நிலவரம்!

பெங்களூர் பங்காளிகளுக்கு பாயாசத்த போட்ற வேண்டியதுதான்! - சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ வைரல்!

போன சீசனில் பறிபோன ப்ளே ஆஃப் வாய்ப்பு! பழிதீர்க்குமா சிஎஸ்கே? - இன்று CSK vs RCB மோதல்!

கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு சம்பளக் குறைப்பா?... பிசிசிஐ எடுத்த முடிவு!

இங்கிலாந்து தொடருக்கான அணிக்குக் கேப்டன் அவர்தான்… பிசிசிஐ எடுத்த முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments