Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சு: பெங்களூருக்கு 2வது வெற்றி கிடைக்குமா?

Webdunia
திங்கள், 15 ஏப்ரல் 2019 (19:47 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் இன்றைய போட்டி மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையில் மும்பை மைதானத்தில் நடைபெறவுள்ளது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா, பந்துவீச முடிவு செய்ததால் இன்னும் சில நிமிடங்களில் பெங்களூரு அணி பேட்டிங் செய்யவுள்ளது. 
 
முதல் ஆறு போட்டிகளில் தோல்வி அடைந்த பெங்களூரு அணி கடந்த போட்டியில் வெற்றி பெற்றதால் ஓரளவு நம்பிக்கையுடன் இன்று களமிறங்குகிறது. இன்று மும்பை அணியை வீழ்த்திவிட்டால் இதே வேகத்தில் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு சென்றாலும் ஆச்சரியமில்லை. அதேபோல் இன்றைய போட்டியில் நல்ல ரன்ரேட்டில் மும்பை வெற்றி பெற்றால் சென்னைக்கு அடுத்த இடமான இரண்டாமிடத்தில் வர வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றைய மும்பை அணியில் ரோஹித் சர்மா, டீகாக், சூர்யகுமார் யாதவ், கெய்ரான் பொல்லார்டு, ஹர்திக் பாண்ட்யா, க்ருணால் பாண்ட்யா, இஷான் கிஷான், ராஹுக் சஹார், பும்ரா, மலிங்கா மற்றும் பெஹண்ட்ராப் ஆகியோர் உள்ளனர்.
 
அதேபோல் பெங்களூரு அணியில் பார்த்தீவ் பட்டேல், விராத் கோஹ்லி, டிவில்லியர்ஸ், ஸ்டோனிஸ், மொயின் அலி, அக்சயதீப் நாத், நேகி, உமேஷ் யாதவ், முகமது சிராஜ், சாஹல், நவ்தீப் சயனி ஆகியோர் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி ஒரு கொடுமைக்காரர்… ஆஸ்திரேலிய ஊடகவியலாளர் தாக்குதல்!

சாம்பியன்ஸ் கோப்பையில் இந்தியா விளையாடும் போட்டிகளுக்கான மைதானம் இதுதான்!

ஸ்மிருதி மந்தனா அபார பேட்டிங்.. 211 ரன்கள் வித்தியாசத்தில் மே.இ.தீவுகள் மகளிர் அணி தோல்வி..!

களத்தில் நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும்.. கோலி குறித்து சஞ்சய் பாங்கர் கருத்து!

பயிற்சியின் போது இடது காலில் காயமான ரோஹித் ஷர்மா… வைரலான புகைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments