Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிளேஆப் சுற்றுக்கு முன்னேறும் நான்காவது அணி எது?

Advertiesment
Mumbai and kolkata playing for playoff
, புதன், 9 மே 2018 (17:54 IST)
ஐபிஎல் தொடரின் பிளேஆப் சுற்றுக்கு முன்னேற கொல்கத்தா, மும்பை, ராஜஸ்தான் அணிகளிடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
 
கடந்த மாதம் 4-ம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஹைதராபாத் மற்றும் சென்னை அணிகள் தங்களது பிளேஆப் சுற்றை உறுதி செய்துள்ள நிலையில், பஞ்சாப் அணி தனது இரண்டு வெற்றியை பதிவு செய்தால் 3-வது அணியாக பிளேஆப் சுற்றுக்கு நுழையும்.
 
இதனால் பிளே சுற்றில் 4-வது அணியாக நுழைய மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகளிடைய கடுமையான போட்டி நிலவுகிறது. தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி எஞ்சியுள்ள 4 போட்டிகளில் 3 போட்டியில் வெற்றி பெற வேண்டும். ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி எஞ்சியுள்ள 4 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். அதேபோல் ரகானே தலைமையிலான ராஜஸ்தான் அணியும் எஞ்சியுள்ள 4 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும்.
 
இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இன்று ஈடன் கார்டன் மைதானத்தில் மோதவுள்ளன. இந்த போட்டியில் மும்பை அணி வெற்றிப்பெறா விட்டால், அந்த அணியின் பிளேஆப் கணவு கேள்வி குறியாகிவிடும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாலை விபத்தில் சிக்கிய சிஎஸ்கே வீரரின் பெற்றோர்