Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாழ்வா, சாவா போட்டியில் ராஜஸ்தான், பெங்களூரு!

Advertiesment
ராஜஸ்தான்
ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.
 
ஐபிஎல் போட்டியின் பிளே-ஆப் சுற்றுக்கு ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஏற்கெனவே தகுதி பெற்றன. அடுத்த இடத்தில் உள்ள கொல்கத்தா அணி, இன்று நடைபெறும் போட்டியில் ஐதராபாத் அணியை வெற்றி பெற்றால் பிளே-ஆப் சுற்றுக்கு சென்றுவிடும்.
 
இந்த புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா அணிக்கு அடுத்த இடத்தில் உள்ள ராஜஸ்தான், பெங்களூரு, பஞ்சாப், மும்பை ஆகிய அணிகள் 12 புள்ளிகளுடன் உள்ளன. இதில் எந்த அணி வெற்றி பெற்று பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்று ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து உள்ளனர்.
webdunia
 
இந்நிலையில், ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் இன்று மோதுகின்றன. இந்த போட்டியில் அதிக ரன்ரேட் அடிப்படையில் வெற்றி பெறும் அணி பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டு எழவே வீழ்ந்தோம்: சிஎஸ்கே ட்விட்...