Webdunia - Bharat's app for daily news and videos

Install App

MI vs SRH: கட்டாய வெற்றி முனைப்பில் ரோகித்...

Webdunia
செவ்வாய், 24 ஏப்ரல் 2018 (13:20 IST)
ஐபிஎல் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. போட்டி பட்டியல் படி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணி மோதுகின்றன. 

 
மும்பை அணிக்கு இந்த ஐபிஎல் சிறப்பானதாக இல்லை. இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 4 தோல்விகளுடன் 2 புள்ளிகளுடன் பட்டியலில் 7 வது இடத்தில் உள்ளது. இதனால், வெற்றிக்காக காத்திருக்கிறார் கேப்டன் ரோகித் சர்மா. 
 
6 புள்ளிகளுடன் பட்டியலில் 4 வது இடத்தில் உள்ள ஹைதரபாத் அணி தனது கடைசி இரு ஆட்டங்களிலும் கிங்ஸ் லெவன் பஞ்சாப், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது குறிபிடத்தக்கது. 
பிளே ஆப் சுற்றுக்கு முன்னதாக மும்பை அணிக்கு இன்னும் 9 ஆட்டங்களே எஞ்சியுள்ளன. இதில் குறைந்தது 7 ஆட்டங்களிலாவது வெற்றி பெற்றால் மட்டுமே மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். 
 
இதனால் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள கேப்டன் ரோகித் சர்மா, அணியை வெற்றி பாதைக்கு அழைத்து வருவதற்கான வழிகளை கண்டறிய வேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளார். 
 
எனவே ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில், மும்பை அணி வெற்றி பெற வேண்டியது கட்டாயமாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி 3 பேட்ஸ்மேன்கள் ஜீரோ ரன்கள்.. 224 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்.. இங்கிலாந்து பேட்டிங்..!

அந்த அணிக்காக நான் 8 ஆண்டுகள் விளையாடினேன்.. ஆனால் எதுவும்… சஹால் ஓபன் டாக்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரரை டிரேட் செய்கிறதா RCB?

அவுட் ஆகி வந்த ஜடேஜாவைக் கடுமையாக திட்டினாரா கம்பீர்?

மீண்டும் ஆர் சி பி அணியில் ABD… என்ன பொறுப்பில் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments