Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

KXIP vs KKR: கெயில் வேகத்தை சமாளிக்குமா கொல்கத்தா?

Advertiesment
KXIP vs KKR: கெயில் வேகத்தை சமாளிக்குமா கொல்கத்தா?
, சனி, 21 ஏப்ரல் 2018 (15:07 IST)
இன்று மாலை 4 மணிக்கு கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.
 
இந்த போட்டி, கொல்கத்தா அணியில் இருக்கும் ஆந்த்ரே ரஸ்ஸல் மற்றும் பஞ்சாப் அணியில் இருக்கும் கிறிஸ் கெயில் ஆகியோர் இடையிலான நேரடி மோதலாக பார்க்கப்படுகிறது.
 
சமீபத்தில் நடந்து முடிந்த போட்டியில் கெயில் தனது அதிரசி ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஹைதராபாத் அணிக்கு முதல் தோல்வியை கொடுத்தார். அதோடு, இந்த சீசனில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். 
 
இன்று நடைபெறும் மோதலில் சுழற்பந்து வீச்சாளர்களான சுனில் நரேன், குல்தீப், பியூஸ் சாவ்லா, நித்திஷ் ராணா ஆகியோரிடம் இருந்து சவால்களை கிறிஸ் கெயில் எதிர்கொள்ளக்கூடும். 
 
ஆனால், கே.எல்.ராகுல், மயங்க் அகவர்வால், கருண் நாயர் ஆகியோரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் சளைத்தவர்கள் இல்லை. ஆரோன் பின்ச், யுவராஜ் சிங் ஆகியோர் இருப்பதும் கூடுதல் பலம்.
 
இரு அணிகளும் பலம் வாய்ந்த அணிகளாகவே உள்ளனர். எனவே, இன்றைய போட்டி ரசிகர்களின் அதிக எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெரும் என தெரிகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இது புனே சூப்பர் கிங்ஸ் அல்ல: தோனி