கோப்பை யாருக்கு..? சென்னை - ஐதராபாத் நாளை மோதல்

Webdunia
சனி, 26 மே 2018 (11:04 IST)
ஐபிஎல் 11-வது சீசன் டி20 தொடரின் இறுதிப்போட்டி நாளை மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
 
தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்கும் இடையேயான இறுதிப்போட்டி நாளை 7 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளும் கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் உள்ளனர்.
 
இந்த சீசனில் கடைசி 4 ஆட்டங்களிலும் தோல்வியை அடைந்திருந்த ஐதராபாத் அணி, நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தியதன் மூலம் உற்சாகத்தில் உள்ளனர்.
 
முந்தைய 3 போட்டிகளில் சென்னையிடம் பெற்ற தோல்விக்கு இறுதி போட்டியில் பதிலடி கொடுத்து கோப்பையை கைப்பற்ற ஐதராபாத் அணி தீவிரமாக உள்ளது. அதேபோல், சென்னை அணி முந்தைய போட்டிகளில் ஐதராபாத் அணியை வீழ்த்தியதை போல இறுதிப்போட்டியிலும் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் சென்னை அணி உள்ளது.
 
சென்னை அணி இதுவரை 6 முறை இறுதி போட்டிக்கு தகுதிப்பெற்று 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஐதராபத் அணி இதுவரை 1 முறை இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்று அந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சங்ககரா!

பாலியல் புகாரில் சிக்கிய வீரரைத் தக்கவைத்து சர்ச்சையில் சிக்கிய RCB!

மேட்ச் முடிந்ததும் கழுத்து வலி சரியானது… மருத்துவமனையில் இருந்து திரும்பிய கில்!

RCB அணியை வாங்குகிறதா காந்தாரா தயாரிப்பு நிறுவனம்?

124 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் தோல்வி அடைந்த இந்தியா.. ரசிகர்கள் ஏமாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments