ஐ.பி.எல். 2010 சீசன் டி20 லீக் தொடரின் 14-வது போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத் அணியுடன் கொல்கத்தா அணி மோதின. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக ராபின் உத்தப்பா 68 ரன்களும், பாண்டே 46 ரன்களும் எடுத்தனர்.
173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களே எடுத்தது. ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக பென் கட்டிங் 41 ரன்களும். ஆசிஸ் நெகரா 35 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து 17 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. இது இந்த அணி பெறும் 3 வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.