ஆஸ்திரேலிய அணியுடனான ராஞ்சி டெஸ்ட் போட்டியின் போது கோலிக்கு ஏதிர்பாராத விதமாக தோள் பட்டையில் காயம் ஏற்பட்டது.
இதனால், தர்மஷாலாவில் நடந்த 4வது டெஸ்ட் போட்டியில் கோலி பங்கேற்கவில்லை. அதேபோல், ஐ.பி.எல் தொடரின் சில போட்டிகளில் கோலி பங்கேற்க மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஐபிஎல் டி.20 தொடர் ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி துவங்க உள்ளது.
இந்நிலையில், காயத்திலிருந்து முழுமையாக குணமடையாததால், பெங்களூர் கேப்டன் கோலி ஐபிஎல் தொடரின் முதல் வாரத்தில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
கோலி அணியில் இணையும் வரை பெங்களூர் அணியை ஏ.பி.டிவில்லியர்ஸ் வழி நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.