குஜராத், ஹைதராபாத் ஆகிய அணிகள் இடையே நடைப்பெற்ற ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் 10வது சீசன் 6வது லீக் போட்டியில் ரெய்னா தலைமையிலான குஜராத் அணி மற்றும் வார்னர் தலைமையிலான ஹைதராபாத் ஆகிய அணிகள் இன்று மோதின.
இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட்டத்தை தொடங்கிய ஹைதராபாத் அணி 15.3 ஓவரில் 140 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது. அதிரடியாக ஆடிய கேப்டன் வார்னர் 76 ரன்களுடன் களத்தில் இருந்தார்.