Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நான் செய்வது பாரதியின் சரஸ்வதி பூஜை

- சேவாலயா முரளிதரன் (நேர்காணல்)

நான் செய்வது பாரதியின் சரஸ்வதி பூஜை
, திங்கள், 4 மே 2009 (14:14 IST)
ஒவ்வொரு மனிதனுக்கும் தன் வாழ்க்கையில் நிச்சயம் நிறைவேற்ற வேண்டும் என்ற ஒரு கனவு இருக்கும். ஆனால் மிகச் சிலரே அதனை நிறைவேற்றியுள்ளனர். அவைகளிலும் அப்படிப்பட்ட கனவுகள் பொதுவாக தனி மனித முன்னேற்றம், வசதி, சாதனை தொடர்பான கனவுகளாகவே இருக்கும்.

webdunia photoWD
ஆனால் தனது இளமையில் எதை தனது வாழ்க்கை இலக்காக கொண்டாரோ அதையே சற்றும் தளராமல் உழைத்து சாதித்த சில மனிதர்களில் ஒருவர் முரளிதரன். இவரின் கனவும் இலக்கும் தனி மனித அபிலாஷை தொடர்பானது அல்ல, மாறாக, அது உன்னதமான பொது நோக்கம் சார்ந்தது என்பதை அறியும்போது, அவர் உள்ளத்தின் உறுதிப்பாடு நம்மை அசத்தியது.

தனி மனித மகிழ்ச்சியே வாழ்க்கை இலக்காக உள்ள இன்றைய உலகில் இளமை முதல் ஒரு பொதுச் சேவையை தனது வாழ்க்கை இலக்காக கொண்டு துவக்கி அதற்காக இன்று வரை வாழ்ந்து வருகிறார் சேவாலயா முரளிதரன். அவரையும், அவரின் திட்டமிட்ட தொண்டையும் புரிந்துகொள்ள அவரை தமிழ்.வெப்துனியா.காம் சந்தித்த்து.

தமிழ்.வெப்துனியா: சேவாலயா என்ற ஒரு மிகப்பெரிய சமூக சேவை அமைப்பை நீண்ட காலமாக நடத்தி வரும் உங்களுக்கு, வெப்துனியா, இந்த நேர்காணல் மூலம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

உங்களது சேவை பற்றி பலரும் பேசி கூறியிருக்கிறார்கள்.

உங்களது சேவாலயாவின் துவக்கம், அதன் பணிகள், அதன் நடவடிக்கைகள் பற்றி முழுமையாக எங்களுக்கு கூறுங்கள்.

webdunia
webdunia photoWD


1988ஆம் ஆண்டு, அதாவது 21 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சேவாலயா அமைப்பு துவக்கப்பட்டது. சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து 5 மாணவர்களுடன் இந்த அமைப்பு துவக்கப்பட்டது. அந்த வீட்டிற்கு மின்சார வசதி கூட இல்லை. அப்படிப்பட்ட நிலையில்தான் இந்த அமைப்பு துவங்கியது.

21 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அமைப்பு இப்போது எப்படி இருக்கிறது என்று பார்த்தால், 12ஆம் வகுப்பு வரையில் மாணவ மாணவியர்கள் பயிலும் பள்ளி உள்ளது. அதில் சுமார் ஆயிரம் மாணவர்கள் இலவசமாகப் படிக்கின்றனர். கைவிடப்பட்ட அல்லது அனாதையாக விடப்பட்ட 160 குழந்தைகள் அங்கேயேத் தங்கிப் படித்து வருகின்றனர்.

யாரும் இல்லாத மற்றும் கைவிடப்பட்ட 60 முதியவர்களும் அங்கு தங்கியுள்ளனர்.

கோசாலையும் உள்ளது. வயதாகி கைவிட்ட மாடுகள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளன.

பள்ளி வளாகத்தில் நூலகம், ஆய்வுக் கூடம், பெண்களுக்கு இலவசமாக கைத்தொழில் கற்றுத் தரும் மையம் ஆகியன உள்ளது. இதுமட்டுமல்லாமல் அவ்வப்போது கிராமப்புற மாணவர்கள் கணினி கற்றுக்கொள்ளும் வகையிலும், ஆங்கிலத்தில் பேசுவதற்கான பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

இளைஞர்களுக்காக பல கருத்தரங்கு, தொழில் பயிற்சி போன்றவையும் செய்து வருகிறோம்.

ஆரம்பத்தில் 5 பேருடன் துவங்கிய இந்த அமைப்பு 21 ஆண்டுகள் கழித்து இந்த அளவிற்கு வளர்ச்சியை அடைந்துள்ளது.

தமிழ்.வெப்துனியா: தற்போது உங்களுக்கு வயது என்ன?

48 வயதாகிறது.

தமிழ்.வெப்துனியா: அப்போது, 21 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அமைப்பைத் துவக்கும்போது உங்களுக்கு 27 வயதுதான் இருக்கும். இதுபோன்ற அமைப்பைத் துவக்க உங்களது பெற்றோரிடம் இருந்து ஆதரவு கிடைத்ததா?

27 வயதில் இதை ஆரம்பித்தேன். ஆனால் 11 வயதிலேயே இதற்கான யோசனை வந்து விட்டது. அதற்கான ஆணிவேராக ஒரு சம்பவம் உள்ளது.

நான் 7ஆம் வகுப்பு படிக்கும்போது, என்னுடன் படிக்கும் மாணவனும் நானும் நண்பர்களானோம். அவனது அப்பா ஒரு பிரபலமாகாத எழுத்தாளர். எழுத்தாளர் என்றால் அவர்கள் வீட்டில் அதிகமாக புத்தகம் இருக்கும் அல்லவா, அதைப்போலவே அந்த வீட்டிலும் ஏராளமான புத்தகங்கள் இருந்தன. அதில் பாரதியார் கவிதைகள் புத்தகம் என்னை வெகுவாக கவர்ந்தது.

நண்பனின் தந்தையிடம் அந்த புத்தகத்தை படிக்கக் கொடுக்குமாறு கேட்டேன். ஆனால் நிறைய பேர் இதுபோல் வாங்கிச் சென்றுவிட்டு திரும்பத் தருவதில்லை என்று கூறி மறுத்துவிட்டார். நாம் மிகவும் வற்புறுத்திக் கேட்கவே ஒரு நாளைக்கு மட்டும் கொடுத்து நாளைக்கு மீண்டும் கொண்டு வந்து கொடுத்துவிட வேண்டும் என்று கூறிவிட்டார்.

நானும் மிகவும் ஆசையோடு வீட்டிற்கு ஓடினேன் புத்தகத்துடன். ஆனால் அன்றைய தினம் சரஸ்வதி பூஜை என்று கூறி என் புத்தகத்தை எல்லாம் தாத்தா பூஜையில் வைக்க கேட்டார். நானோ, இவ்வளவு கஷ்டப்பட்டு வாங்கி வந்து பூஜையில் வைத்துவிட்டால் மீண்டும் நாளைக்குக் கொண்டு போய் கொடுக்கத்தான் முடியும், படிக்க முடியாது என்று நினைத்து என்னுடைய பாடப் புத்தகங்களை மட்டும் பூஜையில் வைத்துவிட்டு பாரதியார் கவிதைகளைப் படிக்கத் துவங்கினேன்.

தாத்தபுத்தகங்களவைத்துபபூஜஆரம்பிக்க, அடுத்அறையில் நான் கவிதநூலுடனஅமர்ந்தேன். புத்தகத்தமுழுதுமபடிக்இயலாதஎன்பதஉணர்ந்து, ஏதஒரபக்கத்தைபபுரட்டிபபடிக்ஆரம்பித்தேன். அந்தபபக்கமஒரகவிதையினநடுவிலிருந்ததொடங்கியது. என்ஆச்சரியம்! அந்தப் பத்தி சரஸ்வதி பூஜையைபபற்றியது. 'மந்திரத்தமுணுமுணுப்பதும், ஏட்டவரிசையாஅடுக்குவதும், சந்தனத்தை, மலரஇடுதலுமசரஸ்வதி பூஜஅல்ல' என்றசொல்லியிருந்தது. நான் குழம்பிபபோனேன். தாத்தாவநம்புவதா, பாரதியநம்புவதா? பாரதி ஒன்றும் கடவுள் மறுப்பாளர் கிடையாது. இது பூஜை இல்லை என்று சொன்னால் உண்மையான பூஜை என்று ஒன்றை சொல்லியிருக்க வேண்டும்.

இதசரஸ்வதி பூஜஇல்லையென்றாலஎதபூஜை? மேலபடித்தேன். 'வீடதோறுமகலையினவிளக்கம்', 'வீதி தோறுமஇரண்டொரபள்ளி' நகர்களெங்கும் பல பல பள்ளி என்றும், 'தேடு கல்வி இல்லாஊரகொளுத்தி விவேண்டும்' என்றுமஅதுதானசரஸ்வதியினஅன்பைபபெவழி என்றுமஇருந்தது.

எனவே பள்ளிகள் அதிகமாக அமைப்பதுதான் உண்மையான சரஸ்வதி பூஜை என்று பாரதி கூறியிருக்கிறார். இப்போது தெருவுக்கு பல பள்ளிகள் உள்ளன. ஆனால் அவை கல்வியை வியாபாரமாகக் கொண்டுள்ளன. இதையா பாரதி கூறினார். இல்லை, அந்த கவிதையிலேயே மேலும் தொடர்கிறார்,

அன்சத்திரம் ஆயிரம் வைப்பதைக் காட்டிலும்,
பதினாயிரமகோவில்களகட்டுவதைககாட்டிலும்,
ஓரஏழைக்குககல்வி அளிப்பதசிறந்ததஎன்கருத்துடன் முடிகிறது. ஏழைக்கு பள்ளி என்றால் அங்கு பணத்திற்கு இடமிருக்காது, இலவசக் கல்வியாகத்தான் இருக்க முடியும். அப்படி அவர் கூறி முடித்தார்.

இது ஒரு பெரிய வேலை, இதை ஒருவரால் செய்ய முடியாது, எல்லோரும் சேர்ந்து செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் அந்த பாடலை முடித்துள்ளார்.

அதற்கப்புறம்தான் அந்தப் பக்கத்தைத் திருப்பிப் பார்த்தேன், இந்த கவிதையை இவர் எப்படித்தான் துவக்கியுள்ளார் என்பதையே பார்த்தேன். 'வெள்ளைததாமரைபபூவிலஇருப்பாள்' என்அந்தபபாடல் துவங்கியுள்ளது.

இரண்டாவது வரியில் வீணை செய்யும் ஒலியில் இருப்பாள் என்று எழுதியுள்ளார்.

அவ்வரிகள் என்னுளசிந்தனைகளஎழுப்பிவிட்டன. நானவளர்ந்தபெரியவனானவுடன் தாத்தா செய்த சரஸ்வதி பூஜையை செய்யாமல், பாரதி சொன்சரஸ்வதி பூஜையைசசெய்வேண்டுமஎன்வெறி மனதிலகுடிகொண்டது.

கிட்டத்தட்ட சுவாமி விவேகானந்தரும் இதையேத்தான் கூறுகிறார்.

விவேகானந்தர் ஒரு மதத்துறவி. மதத்துறவியாக இருப்பவர்கள் அவர்கள் இருக்கும் மதத்தைப் பரப்பவும், கடவுளைப் பற்றி விளக்கமும் கூறுவார்கள். ஆனால் இவர், கடவுளேத் தேவையில்லை, மதமே தேவையற்றது என்று கூறுவார். பெரியாரைப் போல பேசி இருப்பார்.

அவர் சொன்னது, மனிதனைக் கூட சொல்லவில்லை, ஒரு நாய் பசியாக இருந்தாலும் கடவுள் எதற்கு என்று பசியைப் பற்றி அவ்வளவு கூறுகிறார்.

கடவுள் என்பவர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அவதாரத்தில் வருகிறார் என்று சொல்வார்கள். ஆனால் பசித்தவனுக்கு கடவுள் ரொட்டி வடிவில்தான் வருவார். பசியாக இருப்பவனுக்கு முதலில் சாப்பிட உணவு கொடு அப்புறம் கடவுளைப் பற்றிச் சொல்வாய் என்றார். இந்த கருத்தும் எனது மனதில் ஆழமாக பதிந்தது.

அதற்கடுத்தபடியாக மகாத்மா காந்தி, கிராமங்களில் தான் இந்தியா இருக்கிறது. இந்தியாவில் அதிகமாக இருப்பது கிராமங்கள்தான். கிராமங்களுக்கு சுயராஜ்ஜியம் வேண்டும் என்று கூறுவார். கிராமத்தில் அவர்களுக்குத் தேவையான பொருட்களை அவர்களே தயாரித்துக் கொள்ளும் நிலைமை உருவாக வேண்டும் என்று கூறுவார். இந்த கருத்தையும் நான் உள்வாங்கிக் கொண்டேன்.

தமிழ்.வெப்துனியா: இந்த கருத்துக்களின் வடிவமாக ஒரு பள்ளியைத் துவக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போது பிறந்தது?


webdunia
webdunia photoWD
இதைப் படிக்கும்போது எனக்கு 11 வயதுதான். அப்போது, பள்ளி ஆரம்பிக்க வேண்டும், உணவு போட வேண்டும் என்று சின்ன சின்னதாக எண்ணங்கள் தோன்றின. ஆனால் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்த பிறகு அதற்கான சிந்தனைகள் உதித்தன.

என்னுடன் படிக்கும் மாணவர்கள் 20 பேர் சேர்ந்து விவேகானந்தர் அமைப்பு என்று உருவாக்கி, எங்கள் கையில் கிடைக்கும் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்களை ஒன்றாக சேர்த்து வருவோம்.

மாதத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை, ஆதரவற்றோர் இல்லங்களுக்குச் சென்று இனிப்பு, பிஸ்கேட் போன்றவை வாங்கிக் கொண்டு சென்று அவர்களுக்குக் கொடுத்து, பாடி, ஆடி மகிழ்ந்துவிட்டு வருவோம்.

அப்போது, அந்த ஆதரவற்றோர் இல்லங்களை எப்படி நடத்துகிறார்கள் என்பது போன்ற பல விஷயங்களையும் நான் தெரிந்து கொண்டேன்.

தமிழ்.வெப்துனியா: நீங்கள் என்ன படித்துள்ளீர்கள்?

பெங்களூரில் பொறியியல் படித்தேன். எலக்ட்ரானிக்ஸ் துறையில் படித்தேன். அங்கு படிக்கும்போதும், அப்பகுதியில் இருக்கும் குடிசைப் பகுதிக்கு வாரந்தோறும் சென்றுவிடுவேன்.

அ‌ந்த குடிசை‌ப் பகு‌தி‌யி‌ல் வா‌ழ்பவ‌ர்க‌ள் ஊதுபத்தி செய்வார்கள். ஊதுப‌த்‌தி தொ‌ழி‌ற்சாலை‌யி‌ல் இரு‌ந்து ஊதுப‌த்‌தி கு‌ச்‌சிகளையு‌ம், மரு‌ந்துகளையு‌ம் காலையில் வந்து கொடுத்துவிட்டுப் போவார்கள். அந்த குடிசைப் பகுதியில் உள்ள பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் ஊதுபத்தியை ஒட்டி மாலையில் கொடுத்துவிட வேண்டும். பிள்ளைகள் பள்ளிக்கு எல்லாம் செல்ல மாட்டார்கள். இதையேதான் செய்வார்கள்.

நான் அந்த ஊதுபத்தி கம்பெனிக்குச் சென்று சனிக்கிழமை மாலையில் இவர்களுக்கு விடுமுறை கொடுங்கள். அந்த சமயத்தில் இங்குள்ள பிள்ளைகளுக்கு கல்வி கற்பிக்கப் போகிறேன் என்று கூறினேன். அதற்கு சம்மதித்தார்கள்.

அந்த குடிசைப் பகுதியின் ஒரு மூலையில் அங்குள்ள பிள்ளைகளுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்கத் துவங்கினேன்.

அந்த சமயத்தில்தான் பள்ளி ஒன்றைத் துவக்க வேண்டும், உணவு அளிக்க வேண்டும். முடியாத முதியவர்கள் தங்க இடமளிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் வேரூன்றி வளரத் துவங்கியது.

ஆனால் அதற்கு நிறைய காசு வேண்டும். இப்படி ஒன்றை செய்யப் போகிறேன் என்று சொல்லிக் காசு கேட்டால் யாரும் தர மாட்டார்கள். செய்து காண்பித்தப் பிறகு இப்படி செய்கிறேன், உதவுங்கள் என்று கூறினால் கிடைக்கும். எனவே முதல் 6 மாதத்திற்காவது நமது சேமிப்பில் காசு இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

அதனால் வேலைக்குப் போய் ஒரு 3 ஆண்டுகள் காத்திருந்தேன். 3 ஆண்டுகளில் கொஞ்சம் காசு சேமித்து வைத்து, 6 மாதத்திற்கு நன்கொடை எதுவும் வாங்காமல் சமாளிக்க முடியும் என்று முடிவெடுத்தேன்.

தமிழ்.வெப்துனியா: முதலில் என்ன செய்தீர்கள்? இடம் வாங்கினீர்களா?

இல்லை. இடம் வாங்குவதெல்லாம் பல ஆண்டுகள் கழித்துத்தான் செய்தேன். முதலில் ஒரு வாடகை வீட்டைப் பிடித்து தாய் தந்தையை இழந்த 5 பிள்ளைகளைக் கொண்டு வந்து வைத்தேன்.

அவர்களுக்கு சாப்பிட உணவு மட்டும் கொடுத்து, அங்குள்ள பள்ளி ஒன்றுக்கு அனுப்பி வந்தோம். இப்படியே எங்கள் வளர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக இருந்தது.

அந்த சமயத்தில் டி.சி.எஸ்.ஸில் வேலை கிடைத்து நான் ஒரு வருடம் அமெரிக்கா போய் இருந்தேன்.

60 பேர் என் கூட வேலை செய்தார்கள். ஒரு கூட்டம் நடந்தது. வேலை விஷயமாகப் பேசிய பிறகு பொதுவான எதையாவது பேச வேண்டிய நேரத்தில் நான் இந்த அமைப்பு பற்றி எடுத்துச் சொன்னேன். நான் இப்படி ஒரு அமைப்பை நடத்தி வருகிறேன். இதற்கு சொந்தமாக நிலம் வாங்க வேண்டும். நீங்கள் எல்லோரும் உதவி செய்தால் நிச்சயம் வாங்கலாம் என்றதும் அனைவரும் ஆதரவு தெரிவித்து உதவி செய்தார்கள். அதன் பலனாக இங்கு நிலம் வாங்கினேன்.

1991ஆம் ஆண்டில் ஒன்றரை ஏக்கர் நிலம் வாங்கினேன். அங்கு ஒரு கொட்டகை போட்டு வைத்தேன். அப்போது சுமார் 30 பேர் ஆகிவிட்டனர்.

தமிழ்.வெப்துனியா: இப்போது உங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அவரவர் வீடுகளுக்குச் சென்றுவிடுவார்கள் அல்லவா?

1000 பேரில் 160 பேர் மட்டும் பள்ளியில் தங்கும் இடத்தில் தங்கி விடுவார்கள். மற்றவர்கள் அவரவர் வீடுகளுக்குச் சென்றுவிடுவார்கள். 160 பேருக்கு சொந்தமென்று யாரும் இல்லை. மற்றவர்களுக்கு உண்டு. ஆனால் பொருளாதார நிலைமையில் பார்க்கப்போனால் எல்லோருமே ஒரே நிலையில்தான் உள்ளனர்.

பள்ளி அமைக்க நிலம் வாங்கிய பிறகு பள்ளிக் கட்டடம், விடுதிக் கட்டடம் கட்ட பணம் திரட்டினேன். ஒவ்வொரு அறைக்கும் ஒவ்வொரு நபர்களைக் கேட்டு உதவி பெற்று கட்டினேன். தற்போது அந்தப் பள்ளியில் 35 வகுப்பறைகள் உள்ளன. இப்படி பல்வேறு உதவிகளைப் பெற்று ஒரு பள்ளி உருவாகியுள்ளது.

பள்ளி ஆரம்பித்து 3 வருடத்திற்கு தொடர்ந்து 10ஆம் வகுப்பில் முழு தேர்ச்சி கிடைத்தது. பத்திரிக்கைகளில் எல்லாம் வந்தது. இது பற்றி கேள்விப்பட்ட ஒரு பெரியவர் பள்ளிக்கு வந்து பார்வையிட்டார். அப்போது பள்ளி பாதிதான் கட்டப்பட்டிருந்தது. அதைப் பார்த்த அந்த பெரியவர், இப்போ உங்களுக்கு எவ்வளவுத் தேவைப்படும் என்று கேட்டார். நாங்கள் கணக்குப் போட்டுப் பார்த்து நாலைந்து லட்சமாகும் என்று சொன்னோம். அதற்கு அவர், நாளைக்கு வந்து செக் வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்.

முதல் தளம் அமைக்க நிறைய கஷ்டப்பட்டோம். நிறைய நாள் எடுத்துக் கொண்டோம். ஆனால் தேர்வு முடிவுகள் நன்றாக வந்ததால், இரண்டாவது, மூன்றாவது தளங்கள் விரைவாகக் கட்டி முடிக்கப்பட்டது.

அடுத்தது என்னவென்றால், அங்குள்ளவர்களை பள்ளிக்கு வரவழைக்க வேண்டும். அங்கு படிக்க யாருமே ஆர்வம் காட்டாததால்தான் அங்கு பள்ளியே இல்லை.

அங்கிருப்பவர்களில் இரண்டு ரகம், ஒரு சில மேல்தட்டு குடும்பங்கள் பெரிய பள்ளிகளில் தங்களது குழந்தைகளை படிக்க வைத்தனர். மற்றொரு ரகம் கூலி வேலை செய்பவர்கள், அவர்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் எண்ணமே இல்லாதவர்கள்.

நாங்கள் ஒவ்வொரு வீடாகப் போய் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வலியுறுத்தினோம். அதற்கு பெற்றவர்களோ, அவனை பள்ளிக்கு அனுப்பினால் ஒரு நாள் கூலி போய்விடும். அதை நீங்கள் தருவீர்களா என்று கேட்டார்கள்.

படிப்பு செலவை நீங்கள் செய்ய வேண்டாம். எல்லாமே நாங்கள் இலவசமாக தருகிறோம். பணமெல்லாம் கொடுக்க முடியாது. அவன் படித்து வந்தால் பெரிய வேலையில் சேர்ந்து உங்களை நல்லபடியாக வைத்துக் கொள்வான் என்று சொல்லி ஒவ்வொரு பிள்ளையாக பள்ளிக்கு வரவைத்தோம்.

இங்கு வந்த பிறகு அவர்களுக்கு பிடிக்க ஆரம்பித்தது. ஏட்டுக் கல்வி மட்டுமல்லாமல் தொழிற் கல்வியையும் அளித்து வருகிறோம். மாணவர்களுக்கு ஒழுக்கமும் கற்பிக்கப்படுகிறது.

இதோடு அல்லாமல், அங்கு பொதுப் பிரச்சினைகளிலும் தலையிட்டு தீர்வு கண்டுள்ளோம், சாராயம் காய்ச்சுதலை நிறுத்தினோம், இதுபோன்ற பிரச்சினைகளுக்கு அங்குள்ள பொதுமக்களே எங்களை நாடி வந்து கூறுகின்றனர். நாங்களும் தலையிட்டு தீர்வு காண்கிறோம்.

தமிழ்.வெப்துனியா: உங்களது துவக்க காலத்தில் உங்களுடன் இருந்த நண்பர்கள் இப்போதும் உங்களுடன் உள்ளார்களா?

பலர் உள்ளனர், சிலர் தொடர்பில் இல்லை. பல புதியவர்கள் இணைந்துள்ளனர்.

ஆரம்பத்தில் பள்ளிக்கு வாருங்கள் என்று அழைத்த நிலை மாறி, இப்போது பலர் எங்கள் பள்ளிக்கு வந்து, அது என்ன ஏழைகளுக்கு மட்டும், எங்கள் பிள்ளைகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். எவ்வளவு வேண்டுமானாலும் கட்டணம் செலுத்துகிறோம் என்று கேட்கிறார்கள்.

எங்கள் கொள்கையே, ஏதும் இல்லாத பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பதுதான், எங்கள் இலக்கை மாற்றி விடாதீர்கள் என்று கூறி அனுப்பி விடுகிறோம்.

பணம் கட்டி மாணவர்களை சேர்த்துக் கொண்டால், அவர்கள் அதிகமாகிவிடுவார்கள், இவர்கள் குறைந்துவிடுவார்கள். பணம் கட்ட முடியும் என்றால் வேறு எங்காவது சென்றுவிடுங்கள். முடியாதவர்கள் மட்டும் இங்கு வாருங்கள் என்று கூறுகிறோம்.

தமிழ்.வெப்துனியா: உங்கள் பள்ளியில் படித்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களைப் பற்றி கூறுங்கள்?

கடந்த ஆண்டு உமா மகேஸ்வரி என்பவர் 1160/1200 எடுத்தார், ராமச்சந்திரன் 1082/1200 எடுத்தார். இந்த மாணவர்களின் பெற்றவர்கள் கூலி வேலை செய்பவர்கள். இவர்களுக்கு அண்ணா பல்கலையில் மெரிட்டில் பொறியியல் படிக்க வாய்ப்பு வந்தது. அந்த கட்டணத்தையும் நாங்களேக் கட்டி அவரை படிக்க வைத்து வருகிறோம்.

மேல் படிப்பிற்கு நாங்கள் பணம் கட்டி படிக்க வைக்கிறோம் அல்லது அவர்களுக்கு வங்கியில் கடன் வாங்கிக் கொடுத்து விடுகிறோம், படித்து வேலையில் சேர்ந்ததும் அந்தக் கடனை அவர்களே செலுத்திவிடுவார்கள். இதற்காக ஒரு வங்கியில் பேசியுள்ளோம். எங்களது சேவாலயா பள்ளி மாணவர்களுக்கு மேல் படிப்பிற்கு வங்கிக் கடன் அளிக்க உதவுமாறு கூறியுள்ளோம்.

10வது வகுப்பில் 500க்கு 460 மதிப்பெண் பெற்றுள்ளார் ஒரு மாணவர். எங்கள் பள்ளியில் 10வது முடிக்கும் பிள்ளைகள் மீண்டும் எங்கள் பள்ளியிலேயே 11வது வகுப்பில் சேர்ந்து விடுவார்கள்.

இதில் குறிப்பாக ஒரு பையனைக் குறிப்பிட வேண்டும். அவனது அப்பா இவனது சின்ன வயதிலேயே இறந்துவிட்டார். அம்மா திருநின்றவூர் ரயில் நிலையத்தில் வேர்க்கடலை விற்பவர்கள். அந்த அம்மா எங்கள் பள்ளிக்கு அந்த பையனை அழைத்து வந்து, இவனை இங்கேயே தங்க வைத்து படிக்க வையுங்கள் என்று கேட்டுக் கொண்டார். அவன் நல்லா படிச்சு மேல் படிப்பிற்கும் உதவி செய்தோம். அவன் தற்போது ஒரு சாஃப்ட்வேர் என்ஜினியராக உள்ளான். டிசிஎஸ்ஸில் 3 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறான்.

தற்போதும் அவன் சனி, ஞாயிறுகளில் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் இருப்பான். அவனது ஆர்வத்தைப் பார்த்து அவனையும் அறக்கட்டளையின் உறுப்பினராக்கியுள்ளேன். பல்வேறு விதங்களில் அங்கிருந்தவன் என்ற முறையில் அவனது ஒத்துழைப்பும் சிறப்பாக இருக்கும் என்பதால் அப்படி செய்துள்ளோம்.

தமிழ்.வெப்துனியா: ஒழுக்கத்தை எப்படிக் கற்றுத்தருகிறீர்கள்?

பாரதி, விவேகானந்தர், மகாத்மாவின் கருத்துக்களை பல்வேறு பாடத் திட்டங்களாக தொகுத்து அதற்காக ஒரு பாடத்திட்டம் வைத்துள்ளோம். அதை வைத்துத்தான் நல்லொழுக்கத்தைக் கற்றுத் தருகிறோம்.

பெங்களூருவில் ஒரு அமைப்பு, புதிய முறையில் பாடத்திட்டத்தை புகுத்திய பள்ளிக்கு தேசிய விருது ஒன்றை அறிவித்தது. அதற்கு நாங்கள் இந்த நல்லொழுக்கப் பாடத் திட்டத்தினை விளக்கி விண்ணப்பித்தோம்.

சுமார் 22,000 பள்ளிகள் விண்ணப்பித்திருந்தன. எல்லாமே நகர்ப்புற பள்ளிகள் அனைத்தையும் தாண்டி, எங்களது சேவாலயாப் பள்ளி விருதினை வென்றது.

webdunia
webdunia photoWD
இந்த பாடத்தை மற்றப் பள்ளிக் கல்லூரிகளிலும் சிறு வகுப்புகள் நடத்தி எடுக்கிறோம். இதனைக் கேள்விப்பட்ட சிறைத்துறை அதிகாரி நடராஜ் எங்களைத் தொடர்பு கொண்டு பேசினார். அந்த அடிப்படையில் தற்போது நல்லொழுக்கப் பாடத்தைப் பற்றி புழல், வேலூர் சிறைகளில் கைதிகளுக்கும் எடுத்துச் சொல்லி வருகிறோம்.

அங்கு இதைப்பற்றி சொல்வது மிகவும் உணர்வுப்பூர்வமாக உள்ளது. ஒரு சில கைதிகள், எங்கள் தண்டனைக் காலம் முடிந்ததும், நாங்கள் சேவாலயாவிற்கு வந்துவிடுகிறோம், அங்கு சேவையாற்றி எங்கள் காலத்தை கழிக்க விரும்புகிறோம் என்கிறார்கள.
(தொடரும்)



Share this Story:

Follow Webdunia tamil