பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற ஒருநாள்போட்டியில் வெற்றி இலக்கை துரத்திய பாகிஸ்தான் போராடி வென்றது. ஆனால் துவக்க வீரர் மொகமட் ஹபீஸ் வித்தியாசமாக ஆட்டமிழந்தார்.
சொட்சோபே வீசிய பந்தை பராத் ஸ்கொயர் லெக் திசையில் தட்டி விட்டு 2வது ரன்னிற்கு இருவரும் ஓடினர். அப்போது த்ரோ நேராக விக்கெட் கீப்பர் முனைக்கு வந்தது. விக்கெட் கீப்பர் டிவிலியர்ஸ் பந்தை எடுத்து ரன்னர் முனைக்க்கு அடித்தார்.அப்போது ஸ்டம்பின் பாதையிலிருந்து விலகி ஓடிக்கொண்டிருந்த ஹபீஸ் வேண்டுமென்றே பந்தை தடுக்கும் நோக்கத்துடன் ஸ்டம்பின் லைனுக்கு வந்தார் இதனால் பந்து அவரது பின்னங்காலில் பட்டு ரன் அவுட் தடைபட்டது.தென் ஆப்பிரிக்க விரர்கள் முறையிட்டனர். 3வது நடுவரிடம் கேட்டு அவுட் என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த புதிய விதி வந்தபிறகு முதன்முதலில் 'பீல்டிங்கை தொந்தரவு செய்தல், அல்லது பீல்டரை தடுத்தல் என்ற முறையில் ஆட்டமிழந்த முதல் வீரர் என்ற பெருமையை அடைந்தார் ஹபீஸ்.நன்றி யு-டியூப்