வாசிம் அக்ரம் ஒரு டெரர் பவுலர், அதுவும் துவக்க வீரர்களுக்கு அவர் சிம்ம சொப்பனம். என்பதை பல துவக்க வீரர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். வாசிம் அக்ரம் தான் எதிர்கொண்ட மிகச்சிறந்த வீச்சாளர் என்று ரிக்கி பாண்டிங்கே தெரிவித்துள்ளார்.
வாசிம் அக்ரம் பந்துகளை தடுத்தாடி நின்று பிறகு பவுண்டரி அடிப்பதே கடினம், இந்த நிலையில் தனது பந்து வீச்சுத் திறனின் உச்சத்தில் இருந்த போது சச்சின் அவரை அனாயசமாக ஸ்கொயர் லெக் திசையில் அடித்த சிக்ஸ் இது. சச்சினுக்கு அப்போது வயது 17 அல்லது 18 இருக்கும்.
ஷார்ஜாவில் நடைபெற்ற போட்டியில் இந்த சிக்ஸ் அடிக்கப்பட்டது. ஷாட்பிட்ச் போடும் போது புல், ஹுக் ஷாட்களில் சிக்ஸ் அடிப்பது பயிற்சி இருந்தால் ஓரளவுக்கு சுலபம்தான் ஆனால் வாசிம் அக்ரம் வீசிய குட் லென்த் பந்தை சிக்சர் அடிப்பது அதுவும் வாசிம் அக்ரம் உச்சத்தில் இருந்தபோது சாத்தியமில்லாத விஷயமாகும்.இன்று 39 வயதில் ஓய்வு பெறாமல் திக்கித் திணறும் சச்சினைப் பார்க்கும்போது அவரது 18 வயது துள்ளல்களை நினைவில் கொண்டுவருவது இனிமைதானே.நன்றி: யுடியூப்