ரோகித் காட்டடி தர்பார்! சில சுவையான புள்ளிவிவரங்கள்!
, ஞாயிறு, 3 நவம்பர் 2013 (12:51 IST)
நேற்று பெங்களூரில் இந்திய துவக்க வீரர் ரோகித் சர்மா அசாத்தியமான ஒரு இன்னிங்ஸை ஆடினார். 158 பந்துகளில் 12 பவுண்டரிக 16 சிக்சர்கள் சகிதம் அவர் எடுத்த இரட்டை சதம் கிரிக்கெட் அரங்கில் பெரும் குதூகலத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றிய இன்னிங்சின் சில புள்ளிவிவரங்கள் இதோ:ரோகித் சர்மாவின் 158 பந்து 209 ரன்கள் இதற்கு முந்தைய 2 இரட்டை சதங்களை விட மெதுவானது! சேவாகின் 219 ரன்கள் 149 பந்துகளில் எடுக்கப்பட்டது. சச்சின் தென் ஆப்பிரிக்காவை வறுத்த 200 ரன்கள் இன்னிங்ஸ் 147 பந்துகளில் வந்தது.ரோகித் அடித்த 16 சிக்சர்கள் புதிய உலக சாதனையாகும். இதற்கு முன்னர் வாட்சன் மிர்பூரில் வங்கதேசத்திற்கு எதிராக 185 நாட் அவுட்டில் 15 சிக்சர்களை விளாசியிருந்தார்.சச்சின்...
தனது 200-இல் 3 சிக்சர்களையே அடித்தார். சேவாக் 219-இல் 7 சிக்சர்களை விளாசினார். ரோக்த் இருவரையும் சேர்த்த சிக்சர்களைக் காட்டிலும் அதிகம்!