யார் இந்த புதிய காட்டடி மன்னன் கோரி ஆண்டர்சன்?
, வெள்ளி, 24 ஜனவரி 2014 (16:18 IST)
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 36 பந்துகளில் காட்டடி சதமடித்து உலக சாதனை புரிந்ததோடு, இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிகளிலும் இந்தியாவின் பந்து வீச்சை பதம் பார்த்ததோடு, பவுலிங்கிலும் நிரூபித்து வரும் இந்த கோரி ஆண்டர்சனின் கிரிக்கெட் வாழ்க்கை சுவாரஸ்யமானது.
இவரது காட்டடி குறித்து முன்னாள் காட்டடி மன்னன் கிறிஸ் கெய்ன்ஸ் கூறியது உண்மையில் கோரி ஆண்டர்சனுக்கு ஒரு சிறந்த பரிசாகும்: "அவரைப்போன்று பந்துகளை அடிக்கவேண்டும் என்று எனக்கு ஆசை" என்று கூறியுள்ளார் கிறிஸ் கெய்ன்ஸ்.உடல் பருமன், காயங்கள் என்று உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக விளையாட முடியாமல் இருந்த கோரி ஆண்டர்சன் பிறகு தனது சொந்த ஊரான கான்டர்பரியை விட்டு வடக்கு மாகாணத்திற்குக் குடியேறினார். தன் குடும்பம், நட்பு வட்டம் ஆகியவற்றைத் துறந்து கிரிக்கெட்டில் சாதிக்கவே அவர் இங்கு வந்தார்.அவரைப்பற்றி நமது வீரத் கோலி இவ்வாறு நினைவுகூர்கிறார்:
"
கோலாலம்பூர் மற்றும் அன்டர் 19 உலகக் கோப்பையிலும் கோரி ஆண்டர்சன் எங்களை அடித்து நொறுக்கினார். அவர் சில பயங்கரமான சிக்சர்களை அடித்தார். பத்தொன்பது வயதிற்குள்ளாகவே அவர் அவ்வளவு சக்தி வாய்ந்த ஷாட்களை விளையாடுவார். நாங்கள் அப்போது நியூசீலாந்து வந்தபோது கூட டுனெடினில் ஒரு சதம் அடித்தார். அந்தப் பிட்ச் வேறு ஒரு இடத்தில் தயாரிக்கப்பட்டு அங்கு வந்து பொருத்தப்பட்ட பிட்ச். ஆடுவது மிக மிக கடினம், அப்போதும் மிகப்பெரிய சிகர்களை அவர் விளாசியதை பார்த்தேன்.