மொஹாலி போட்டி: சுவையான தகவல்கள்
, வெள்ளி, 21 அக்டோபர் 2011 (12:53 IST)
மொஹாலியில் நேற்று இந்தியா அபாரமாக வெற்றி பெற்று இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. இந்த ஆட்டத்தின் சில சுவரசியமான புள்ளிவிவரங்கள் இதோ:இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற இருதரப்பு ஒருநாள் தொடரில் இந்தியா தொடர்ச்சியாக 3வது தொடரை வென்றுள்ளது. 2005- 06-இல் 5- 1, 2008- 09-இல் 5- 0, இப்போது இதுவரை 3- 0 என்று இந்தியா வெற்றி பெற்றுள்ளது.மொஹாலியில் 11 ஆட்டங்களில் நேற்று பெற்ற வெற்றி 7வது ஆகும்.மொஹாலியில் இலக்கை துரத்தியதில் இந்தியா 300 ரன்கள் எடுத்ததே இதுவரை அதிகபட்சமாகும். பாகிஸ்தான் 2007ஆம் ஆண்டு 322 ரன்களை இந்தியாவுக்கு எதிராக துரத்தி வெற்றி பெற்றது.ரஹானே அடித்த 91 ரன்கள் அவரது இரண்டாவது அரை சதமாகும், இதற்கு முன்னர் இங்கிலாந்தில் தனது முதல் போட்டியில் அதிரடி 54 ரன்களை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.கவுதம் கம்பீர் 58 ரன்களை எடுத்ததன் மூலம் இங்கிலாந்துக்கு எதிராக தனது 6வது அரைசதத்தை எடுத்தார்.2011
ஆம் ஆண்டில் கம்பீரின் ஒருநாள் தொடர் சாதனை அபாரமாக உள்ளது. இதுவரை 12 ஆட்டங்களில் 567 ரன்களை 51.54 என்ற சராசரியுடன் பெற்றுள்ளார். இந்த தொடரில் 3 இன்னிங்ஸில் 174 ரன்கள் எடுத்துள்ளார் சராசரி 87.சுரேஷ் ரெய்னா தனது 7வது பூஜ்ஜியத்தை நேற்று எடுத்தார். இங்கிலாந்துக்கு எதிராக இரண்டாவது.நடப்புத் தொடரில் வீரத் கோலி 184 ரன்களை எடுத்துள்ளார் சராசரி 92 ரன்கள்.மகேந்திர சிங் தோனி தனது ஒருநாள் பேட்டிங் சராசரியை 50.44 என்று பராமரித்து வருகிறார்.வெற்றி பெறும் சிறப்பான துரத்தல்களில் மகேந்திர சிங் தோனி 100 ரன்களுக்கும் மேல் சராசரி வைத்துள்ளார். அதாவது 59 வெற்றித் துரத்தல்களில் தோனி 1939 ரன்களை 107.22 என்ற சராசரியில் பெற்றுள்ளார்.2011
ஆம் ஆண்டில் தோனியின் ஒருநாள் போட்டிகளின் பேட்டிங் சராசரி 51.84 ஆகும். 22 போட்டிகளில் 674 ரன்களை விளாசியுள்ளார். இதில் 5 அரைசதங்கள் அடங்கும்.2011-
இல் ரவீந்தர ஜடேஜா பேட்டிங் சராசரி 43.66 வைத்துள்ளார்.