வீரத் கோலி: அன்று போர்ட் ஆஃப் ஸ்பெயினில் கோலி அடித்த சதம் ஒரு சாதனை சதம், இந்த மைதானத்தில் (குவீன்ஸ் பார்க் ஓவல்) ஒரு கேப்டன் அடிக்கும் முதல் சதம் ஆகும் இது. இதற்கு முன்னர் மேற்கிந்திய முன்னாள் கேப்டன் பிரையன் லாரா 1998ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 93 ரன்கள் எடுத்தார்.
ஷிகர் தவானின் நடப்பு 29 நாட்கள் கிரிக்கெட்: 69, 24, 11, 31, 68, 48, 102 நாட் அவுட், 114 - மொத்த ரன்கள் 467; சராசரி 66.71; ஸ்ட்ரைக் ரேட் 95.89, 48 பவுண்டரிகள் 6 சிக்சர்கள்.ஷிகர் தவான், ரோகித் சர்மா மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரகா ஜோடி சேர்ந்து எடுத்த துவக்க விக்கெட்டுக்கான ரன்களான 123ரன்கள் இந்த ஆண்டின் இவர்களுடைய 3வது சதக் கூட்டணியாகும். உலகின் எந்த துவக்க கூட்டணியும் 2013-இல் சோபிக்கவில்லை.
அஷ்வின்: 2013ஆம் ஆண்டு 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவருக்கு பின்னால் ரவீந்தர் ஜடேஜா 49 விக்கெட்டுகளில் துரத்தி வருகிறார்.
கிறிஸ் கெய்ல்: ஒருநாள் கிரிக்கெட்டில் 1000 பவுண்டரிகளை அடித்த இரண்டாவது வீரர் கிறிஸ் கெய்ல். லாரா 1035 பவுண்டரிகளுக்கு மேல் அடித்துள்ளார்.2011
உலகக் கோப்பைக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்துள்ள கேப்டன்கள்:
அலிஸ்டைர் குக் : 1823, மிஸ்பா உல் ஹக் - 1370, தோனி- 1264, கிளார்க்- 1,214, டிவிலியர்ஸ் 1,157.
2011 உலக கோப்பை கிரிக்கெட்டிற்கு பிறகு அதிகர் ஒருநாள் போட்டி ரன்கள்:
கோலி 2289 ரன்கள் முதலிடம். சங்கக்காரா (2101) தில்ஷான் (1914)அடுத்த நிலைகளில் உள்ளனர்.
உலகக் கோப்பை 2011-ற்குப் பிறகு இந்தியா 30 ஒருநாள் போட்டிகளில் வென்றுள்ளது. இதிலும் நம்பர் 1.