Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தெருநாயைத் தத்தெடுத்த கேப்டன் தோனி!

தெருநாயைத் தத்தெடுத்த கேப்டன் தோனி!
, வெள்ளி, 2 ஆகஸ்ட் 2013 (08:30 IST)
FILE
ஜிம்பாவே தொடரிலிருந்து ஓய்வு அளிக்கபட்ட இந்திய கேப்டன் தோனி அமெரிக்காவை சுற்றிப் பார்த்து விட்டு திரும்பியுள்ளார். டுவிட்டரில் ரசிகர்களுடன் சுவையான தகவல்கள் பலவற்றை அவர் பகிர்ந்து வருகிறார்.

ராஞ்சியில் உள்ள நாய்கள் காப்பகத்திற்குச் சென்று அங்குள்ள தெருநாய் ஒன்றை தத்தெடுத்து அதனை பரமாரிக்கும் செலவுகளை தானே ஏற்றுக் கொள்ள தோனி சம்மதித்துள்ளார்.

webdunia
FILE
அந்த நாய்க்க்கு லியா என்று பெயரிட்டுள்ள தோனி டுவிட்டரில் அதன் படத்தையும் வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே 2011ஆம் ஆண்டு மைசூரில் உள்ள விலங்கியல் பூங்காவிலிருந்து அவர் 9 ஆண்டுகளேயான ஒரு புலியை தத்தெடுத்து வளர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டுவிட்டரில் அவர் மேலும் சில சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்டுள்ளார்:

தன் வாழ்க்கையில் முதன் முதலாக ரூ.4500 கொடுத்து வாங்கிய மோட்டார் சைக்கிளை பழுது பார்த்து மீண்டும் ஓட்டும் நிலைமைக்கு கொண்டுவரவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அவர் கொடுக்கும் இன்னொரு தகவல் உண்மையில் புதிதுனா. ஒரு பொருளை நாம் வீட்டிற்கு வரவழைத்தால்தான் விலை அதிமாகும் நாம் அங்கு போய் வாங்கினால் வீட்டிற்கு வர வைப்பதைவிட விலை குறைவாகத்தான் இருக்கும்.

ஆனால் தோனி டுவீட்டியிருப்பது இதற்கு மாறான ஒன்றை! அதாவது ராஞ்சியில் வீட்டிற்கு வந்து பால் சப்ளை செய்தால் லிட்டர் ரூ.32 என்று சார்ஜ் செய்வதாகவும் அதையே நாம் அவர்கள் இடத்திற்கு சென்று வாங்கினால் லிட்டருக்க்கு ரூ.34 சார்ஜ் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட் இல்லாமல் பத்திரிக்கையாளர்கள் தொல்லை இல்லாமல் உண்மையில் ரிலாக்ஸாகவே இருக்கிறார் போலிருக்கிறது தோனி!

Share this Story:

Follow Webdunia tamil