தெரியாத பேட்ஸ்மெனுக்கு வீசுவது கடினமாம் - சொல்றாருப்பா ஹர்பஜன்!
, வியாழன், 18 ஏப்ரல் 2013 (18:13 IST)
தெரிஞ்ச பேட்ஸ்மெனிடம் ஏன் அடிவாங்கினாய் என்றால் அவர்களுக்கு எனது பந்து வீச்சு பழக்கம் என்று கூறவேண்டியது, சரி தெரியாத பேட்ஸ்மெனும் ஏன் விளாசுகிறார் என்றால் அவரைப் பற்றி தெரியவில்லை என்று கூறவேண்டியது. எப்படி? புரிந்ததா ஹர்பஜனின் வாய்த் தந்திரம்!மொத்தத்தில் பந்து வீசுவதே கடினம் என்று கூறுவது ஹர்பஜனுக்கு சாலப்பொருந்தும். அவர் என்ன திருவாய்மலருந்தருளியுள்ளார் என்று பார்ப்போம்:"
முன் பின் தெரியாத பேட்ஸ்மெனுக்கு பந்து வீசுவது கடினமே. அவர்கள் எப்படி விளையாடுவார்கள் அவர்களது ஸ்ட்ரோக்குகள் என்ன பலம் பலவீனம் என்னவென்று நமக்கு தெரியாது. இதனால் அது சவாலானது" என்கிறார் ஹர்பஜன்.மேலும் இந்திய பிட்ச்கள் ரொம்பவும் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கிறதாம். பவுண்டரிகள் சிறியதாக இருக்கிறதாம். இப்படியெல்லாம் கூறுகிறார் ஹர்பஜன்.இதையெல்லாம் கோடிக்கணக்கில் ஒப்பந்தத் தொகை பெற்றுக் கொண்டு கூறக்கூடாது ஹர்பஜன் சிங் அவர்களே. அயல்நாட்டு வீரர்களுக்கு குண்டும் குழியுமான பிட்சைப் போட்டு அதிலும் கூட விக்கெட் எடுக்கத் திணறிய போது இதனை கூறியிருந்தால் பொருத்தமாக இருக்கும்.அப்ப ஹர்பஜன் விக்கெட் எடுக்கவேண்டுமென்றால் 10 ஏக்கராவுக்கு பவுண்டரியும், ஏற்கனவே அவருக்கு தெரிந்த பக்கத்து வீட்டு மாமா போன்றவர்களை பிளேயர் என்று இறக்கிவிடவேண்டும் போல் தெரிகிறது.