தென் ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை இழக்காத ஆஸ்ட்ரேலியா - சுவையான தகவல்கள்
, வியாழன், 6 மார்ச் 2014 (15:01 IST)
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்ட்ரேலியா நேற்று 2- 1 என்று வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்காவில் இதுவரை ஆஸ்ட்ரேலியா தொடரை இழந்ததேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சில சுவையான புள்ளிவிவரங்களைப் பார்ப்போம்:
1992
ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிற்கு மீண்டும் தென் ஆப்பிரிக்கா வந்த பிறகு இரண்டு அணிகள்தன் தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியுள்ளது. ஒன்று இங்கிலாந்து. இரண்டாவது ஆஸ்ட்ரேலியா, 7 தொடர்களில் 5 தொடர்களை தென் ஆப்பிரிக்க மண்ணில் ஆஸ்ட்ரேலியா வென்றுள்ளது. இது ஒரு மகத்தான் சாதனையாகும். ஏனெனில் எல்லா அணிகளுக்கும் மிகவும் கடினமான ஒரு தொடர் என்றால் அது தென் ஆப்பிரிக்காவில் போய் விளையாடுவதுதான்.
ஆலன் பார்டர், ஸ்டீவ் வாஹ், பாண்டிங், தற்போது கிளார்க் இதுவரை தென் ஆப்பிரிக்காவில் தொடரை இழக்காமல் ஆஸ்ட்ரேலியா சாதனை புரிந்துள்ளது. தென் ஆப்பிரிக்கா தன் சொந்த மண்ணில் ஆஸ்ட்ரேலியாவை டெஸ்ட் தொடரில் வீழ்த்தியதேயில்லை.