நேற்று புது டெல்லியில் இந்தியா இங்கிலாந்தை மிகப்பெரிய வெற்றி பெற்ற ஆட்டத்தின் சுவையான புள்ளி விவரங்கள் சில:
கோட்லா மைதானத்தில் அதிக விக்கெட்டுகள் மீதமிருக்க இந்தியா வெற்றி பெற்றிருப்பது இதுவே முதல்முறை. இதற்கு முன்பு 1999 ஆம் அண்டு நியூஸீலாந்து அணியை இந்தியா 7 விக்கெட்டுகளில் வித்தியாசத்தில் வீழ்த்தியதே அதிகபட்சமாகும்.
80 பந்துகள் மீதமிருக்கையில் வெற்றி பெற்றது இங்கிலாந்துக்கு எதிரான மிகப்பெரிய வெற்றியாகும்.
வீரத் கோலியின் 112 ரன்கள் அவரது 7வது சதமாகும். இதில் 6 முறை இந்தியா இவர் சதம் எடுத்தபோது வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக இரண்டாவது சதம்.
ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக விசாகப்பட்டிணத்தில் 118 ரன்கள் எடுத்து வெற்றி தேடித் தந்த கோலியின் இரண்டாவது அதிகபட்ச சொந்த ரன் எண்ணிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் முறையாக கோலி ஒரு காலண்டர் ஆண்டில் 1000 ரன்களை எடுத்து சாதனை படைத்துள்ளார். டிராட் 1173 ரன்களையும் வாட்சன் 1075 ரன்களையும் எடுத்துள்ளனர்.
ஒரு நாள் போட்டிகளில் கோலி நேற்று தனது 6வது ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். இங்கிலாந்துக்கு எதிராக முதல் ஆட்ட நாயகன் விருது.
கவுதம் கம்பீர் தனது 84 நாட் அவுட் மூலம் இங்கிலாந்துக்கு எதிராக 5வது அரைசதம் எடுத்தார். ஒருநாள் தொடரில் 26வது அரைசதமாகும்.
இங்கிலாந்துக்கு எதிராக கவுதம் கம்பீரின் அதிகபட்ச சொந்த ரன் எண்ணிக்கை 84 என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்துக்கு எதிராக கம்பீர் 13 போட்டிகளில் 509 ரன்களை 42.41 என்ற சராசரியில் பெற்றுள்ளார்.
வெற்றி பெறும் போட்டிகளில் கவுதம் கம்பீரின் சராசரி 49.40 ரன்களாகும். கம்பீர் இதுவரை 75 ஒருநாள் போட்டிகளில் 3,211 ரன்களை 6 சதங்களுடன் 21 அரைசதங்களையும் எடுத்துள்ளார்.
கவுதம் கம்பீரும், கோலியும் இணைந்து அவுட் ஆகாமல் 209 ரன்களை 3வது விக்கெட்டுக்காக சேர்த்தது இங்கிலாந்துக்கு எதிரான அதிகபட்ச ஜோடி சேர்ந்து எடுத்து ரன்களாகும். கங்கூலி, சேவாக் கொழும்புவில் எடுத்த 192 ரன்களை இவர்கள் கடந்து விட்டனர்.
இந்தியா, இங்கிலாந்து ஒருநாள் போட்டிகளில் தோனி 30 பேரை அவுட் செய்ய காரணமாயிருந்ததும் ஒரு சாதனையாகியுள்ளது.
வினய் குமாரின் 4/30 என்ற பந்து வீச்சு ஒருநாள் போட்டிகளில் இவரது சிறப்பான பந்து வீச்சாகும்.