டிவி ரியால்டி ஷோவில் நடனமாடிய சானியா மிர்சா-ஷோயப் மாலிக் தம்பதியினர்!
, வெள்ளி, 21 டிசம்பர் 2012 (19:19 IST)
ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் இம்மாதம் 29ஆம் தேதி ஒளிபரப்பாகும் 'நச் பாலியே 5' என்ற நடன ரியால்டி ஷோவில் இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா அவரது கணவர் ஷோயப் மாலிக் இணைந்து நடனமாடுகின்றனர்.இதற்கான காட்சி ஒத்திகை நடைபெற்றுள்ளது. 11 பிரபல ஜோடிகளுடன் இந்த விருந்தினர் ஜோடியும் நடனமாடியுள்ளனர்."
நாங்கள் விருந்தினர் ஜோடியாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதில் மகிழ்ச்சியடைகிறோம், நாங்கள் நிறைய நடன ஒத்திகைப் பார்த்து விட்டோம். எங்களது திருமண இசை நிகழ்ச்சியின்போதே நடனமாட நாங்கள் இருவரும் நன்றாக தயார் படுத்திக் கொண்ட அனுபவம் இங்கு கைகொடுத்துள்ளது. ஒருங்கிணைப்பும், ஸ்டெப்ஸ்களை நினைவில் வைத்துக் கொள்வது கடினம்" என்று கூறியுள்ளார் டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா.நாங்கள் ஓரளவுக்கு நன்றாக செயலாற்றியுள்ளதாகவே நினைக்கிறேன், ஷோயபிற்கு டான்ஸ் மிகவும் பிடித்தமானது, அவர் நல்ல டான்சரும் கூட அனாஅல் நான் கொஞ்சம் கூச்ச சுபாவம் உடையவள் என்று சானியா மிர்சா மேலும் தெரிவித்தார்.ஷோயப் மாலிக்கும், திறமையை நிரூபிக்கிறோம் பாருங்கள் என்கிறார். கிரிக்கெட் நான் நேசிக்கும் ஒரு விளையாட்டு, இருப்பினும் டான்சிலும் மிளிர ஆசை உண்டு என்றார்.