Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சேவாகின் ஆல் டைம் கிரேட் டபுள் செஞ்சுரி(வீடியோ)

சேவாகின் ஆல் டைம் கிரேட் டபுள் செஞ்சுரி(வீடியோ)
, ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2013 (16:39 IST)
FILE
இலங்கையில் அஜந்தா மெண்டிஸ் என்ற சக்தி (அப்போது அப்படித்தான் கூறப்பட்டது) உருவாகி இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மென்களையெல்லாம் ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த அந்த 2008 ஆம் ஆண்டு இலங்கை பயணத்தில் சேவாக் கால்லே மைதானத்தில் துவக்கத்தில் களமிறங்கி கடைசி வரை ஆட்டமிழக்காமல் அடித்த 201 நாட் அவுட் உண்மையில் ஒரு ஆல் டைம் கிரேட் இன்னிங்ஸ் என்பதை யாரும் குறிப்பிடுவதில்லை.

ஒருமுனையில் விக்கெட்டுகளாக சரிய தனி மனிதனாக இலங்கையின் பந்து வீச்சை முழு ஆதிக்கம் செலுத்தினார் சேவாக். ஒன்றுமே செய்யமுடியவில்லை. அனைத்தும் கண்களில் ஒற்றிக்கொள்ளும் ஷாட்கள்.

எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் இலங்கையில் முரளிதரனை எதிர்த்து இது போன்று ஆடுவது மிகமிக கடினம். குலசேகரா, சமிந்தா வாஸ், முரளிதரன், அஜந்தா மெண்டிஸ் ஆகியோரைக் கொண்ட இந்த பந்து வீச்சு வரிசை சேவாகை ஆட்டவும் முடியவில்லை அசைக்கவும் முடியவில்லை.

உணவு இடைவேளைக்கு முன்பே 90 நாட் அவுட். அதன் பிறகு இரட்டை சதம். இது சேவாகின் 5வது இரட்டை சதம் ஆகும். இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

ரிச்சர்ட்ஸ், டான் பிராட்மேன், பிரையன் லாரா மட்டுமே இத்தகைய ஆதிக்கத்தைச் செலுத்த முடியும்.

வீடியோ- நன்றி: யூடியூப்
அப்லோடட் இன் யூ டியூப் பை கிரிக்கெட் குரு.

Share this Story:

Follow Webdunia tamil