Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாதாரண டீக்கடைக்கு சென்ற சச்சின் டெண்டுல்கர்!

Advertiesment
சாதாரண டீக்கடைக்கு சென்ற சச்சின் டெண்டுல்கர்!
, சனி, 23 நவம்பர் 2013 (15:39 IST)
FILE
அயராத கிரிக்கெட்டிற்குப் பிறகு குடும்பத்துடன் உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டத்தில் உள்ள முசூரிக்கு சென்றுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

அங்கு 5 நாட்கள் தங்க திட்டமிட்டுள்ள அவர் லால்டிப்பா பகுதியில் உள்ள தனக்கு பிடித்தமான டீக்கடைக்கு சென்றார்.

சச்சின் முசூரிக்கு வரும் போதெல்லாம் தனது நண்பர் சஞ்சய் நரங் என்பவர் வீட்டில் தங்குவது வழக்கம். அப்போது நண்பருடன் இந்த டீக்கடைக்கு அடிக்கடி வந்த சச்சினுக்கு டீக்கடையின் உரிமையாளர் பிரத்யேகமாக தயாரித்து தரும் மசாலா டீ மிகவும் பிடித்தப் போனது.

இஞ்சி, தேன், எலுமிச்சைப் பழம் சேர்த்து கடையின் உரிமையாளர் விபின் பிரகாஷ் அளிக்கும் டீயை ருசிப்பதற்காக மனைவி அஞ்சலியுடன் சச்சின் இந்த கடைக்கு மீண்டும் விஜயம் செய்தார்.

பன் மற்றும் டீயை ருசித்த அவர் சுமார் 1/2 மணி நேரம் அங்கேயே இருந்து ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

Share this Story:

Follow Webdunia tamil