சச்சின் பற்றி தெரியாத சுவையான தகவல்கள்!
, வெள்ளி, 11 அக்டோபர் 2013 (12:53 IST)
இது ஒரு இமேஜ் பில்டிங் வேலைதான். சச்சினின் ஆட்டம் பற்றி உத்திரீதியாக பேசுவதுதான் அவருக்கு செய்யும் மிகப்பெரிய மரியாதையாக இருக்கும் அவரது சொந்த வாழ்விலிருந்து யாருக்கும் தெரியாத அரிய தகவல்களை வெளியிடுவது இமேஜ் ஸ்பின்னிங்தான்! ஆனால் மற்ற ஊடகங்கள் செய்யும்போது நாம் மட்டும் விதிவிலக்காக இருந்தால் வடிவேலு காமெடியில் சொல்வது போல் 'ஊர் ஒத்துக்காது'!
1.
சச்சினின் தந்தை இந்தி இசை மேதை எஸ்.டி.பர்மன் என்கிற சசின் தேவ் பர்மனின் பரம ரசிகர் அவரது நினைவாகவே சச்சின் என்று பெயர் வைத்தாராம்.2.
ஜான் மெக்கன்ரோவின் விசிறியான சச்சின் அவரைப்போலவே தலையில் பேன்ட் கட்டிக்கொள்வாராம்! இவருக்கு போரிஸ் பெக்கர், பீட் சாம்ப்ராஸ், ரோஜர் பெடரர், டீகோ மரடோனாவைப் பிடிக்குமாம்! இவர்களை யாருக்குத்தான் பிடிக்காது. பிரபலமானவர்களை பிடிப்பதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. ஆனால் அதை சச்சின் கூறினால் அது செய்திதானே.3.
இவரது உயரத்திற்கு வேகப்பந்து வீச்சாளராக ஆக வேண்டும் என்று வந்தாராம்! பவுன்சர் வீசினால் பூமிக்கு அடியில் பந்து போய்விடும் என்று டெனிஸ் லில்லி இவரை பேட்டிங்கில் கவனம் செலுத்தச் சொன்னாராம்.4.
வடையை முக்குவதில் வல்லவராம் சச்சின் இதில் இவருக்கும் வினோத் காம்ப்ளி மற்றும் சலீல் அன்கோலாவுக்கும் போட்டியே நடக்குமாம்!5.
பிடித்த கிரவுண்ட் சிட்னி கிரிக்கெட் கிரவுண்ட்.6.
பிடித்த பாடகர் கிஷோர் குமார், ராக் இசைக்குழுவான டைர் ஸ்ட்ரெய்ட்ஸ்.7.
வினாயகரின் சிறந்த பக்தராம் சச்சின். காலைவேளையில் பிள்ளியார் கோயில் செல்வது வழக்கமாம்.8.
எப்போதும் இடது கால் பேடையே...
முதலில் கட்டுவாராம். இது சென்டிமென்ட் என்கிறார்கள். ஆனால் இடது காலை முதல் பேடை கட்டுவதுதான் வசதி.