கிரிக்கெட்டில் வீரர்கள் தகராறுகளுக்கும் RSS- தான் காரணம்! ட்விட்டரில் வேடிக்கை
, சனி, 13 ஏப்ரல் 2013 (14:38 IST)
ட்விட்டரில் 120 கேரக்கடர்களுக்கு போடப்படும் இரட்டை வரி வாசகங்கள் பெரிய அளவில் வாசகர்களை ஈர்த்து வருகிறது.இதில் சுவாரசியமான ட்விட்டர் ஒன்றில் கூறப்பட்டுள்ள வாசகம் நல்ல ரசனையான் நகைச்சுவைக்கு உதாரணமாக விளங்குகிறது.நம் ஆங்கில ஊடகங்கள் வீரர்களிடையே தகராறு, மனஸ்தாபம், கருத்து வேறுபாடு வரும்போது ஒரு சில வார்த்தைகளை திரும்பத் திரும்ப பயன்படுத்துகின்றன.இது குறித்து நையாண்டியாக நல்ல கற்பனையுடன் ரமேஷ் ஸ்ரீவத்ஸ் என்ற நபர் நகைச்சுவையுடன் ஒரு ட்வீட் செய்துள்ளார்.அதனை அப்படியே கொடுத்தால் புரியாது என்பதற்காக மறு கூற்றாக்கம் செய்து கொடுக்கிறோம்:தோனி, சேவாக் இடையே Rift, ஹர்பஜன், ஸ்ரீசாந் பளார் (Slap) தற்போது கோலி, கம்பீர் இடையே Spat" இதில் அவர் என்ன செய்துள்ளார் ரிப்ட், ஸ்லாப், ஸ்பேட் என்ற ஆங்கில சொற்களின் முதல் 3 எழுத்தை எடுத்துக் கொண்டு இதற்கும் RSS தான் காரணம் என்று கூறியுள்ளார். நல்ல ரசிக்கத் தகுந்த நகைச்சுவை.இதே போல் சென்னை சூப்பர் கிங்ஸின் தீவிர பக்தர் ஒருவர் ட்வீட் செய்கையில், "பெங்களூர் வெற்றி பெற்றால் கெய்ல் விளாசல், ஏ.பி. டிவிலியர்ஸ், கோலி ஸ்மோக்டு சென்னை என்று எழுதுகிறார்கள் இதே சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றால் ஸ்ரீனி மாமா பிக்ஸ் செய்துவிட்டார், தோனி பிக்ஸ் செய்துவிட்டார்" என்று கூறுகிறார்கள். துவேஷிகளே வளருங்கள் ஒருநாள் நீங்கள் அழுவீர்கள் என்று உணர்ச்சி பொங்க கூறியுள்ளார் அவர்.