ஆஸ்ட்ரேலிய தலைநகர் கான்பெராவில் புதன்கிழமை நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் ஆஸ்ட்ரேலியாவின் புதிய 'சென்சேஷன்', ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் அடித்த ராட்சத சிக்சர் ஷாட்டை மேற்கிந்திய அணியின் அதிரடி மன்னன், ஐ.பி.எல். மும்பை இந்தியன் புகழ் கெய்ரன் போலார்ட் எம்பிப்பிடித்தது வர்ணைனைகளுக்கு அப்பாற்பட்டது.
கிரிக்கெட் வரலாற்றில் பல யுகங்களுக்கு இந்த கேட்ச் பேசப்படும் என்று வர்ணனையாளர்கள் புகழ்ந்து தள்ளியுள்ளனர்.ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிக தொகைக்கு எலம் போன மேக்ஸ்வெல், மேற்கிந்திய ஸ்பின்னர் சுனில் நரைன் வீசிய பந்தை ஸ்லாக் ஸ்வீப் செய்தார். பந்து பிடிக்க முடியாத உயரத்தில் நிச்சயமான சிக்சருக்குச் சென்று கொண்டிருந்தது.எங்கிருந்தோ வந்தார் போலார்ட் பந்து தள்ளி கைக்கெட்டாத உயரத்தில் சென்று பவுண்டரியை கடக்க இருக்கும் சமயத்தில் ஒரு எம்பு எம்பினார். பாய்ந்தார். ஆனால் அது இரட்டை எம்புதலுக்குச் சமம். பந்தை ஒரு கையில் பிடித்தாரே பார்க்கவேண்டும். பிடித்தது பவுண்டரி அருகே. கயிறு அருகே உள்ளது. அப்படி ஒரு கேட்சை பிடித்து பவுண்டரிக் கயிறின் மீதோ, தாண்டியோ விழாமல் பவுண்டரிக்குள் விழுந்து கேட்ச் ஆக்கியது அவரது உடல் பேலன்ஸிற்கு ஒரு எடுத்துக் காட்டு.மைதானத்தில் மேக்ஸ்வெல் உட்பட அனைவருக்கும் ம் அதிர்ச்சி! இனிமேலும் சிறந்த கேட்ச்கள் பிடிக்கப்படலாம். ஆனால் இதுபோன்ற அதிர்ச்சிகரமான, நம்ப முடியாத கேட்சை பார்ப்பது அரிது.அதிலும் இந்தக் கேட்சை ரிபீட் செய்வது முடியாத காரியம்! அது மட்டுமல்ல இதே போட்டியில் இன்று மைக்கேல் கிளார்க்கிறி அவரது பந்து வீசில் அவரே பிடித்த கேட்சும் இந்த அதிசய பீல்டரின் ரிப்ளெக்ஸிற்கு ஒரு உதாரணம்.அது மட்டுமல்ல கடைசியில் அதிரடி வீரர் பெய்லியை வீழ்த்தியதும் பொலார்டின் கேட்ச்தான்!நன்றி: யுடியூப்