கிரிக்கெட்: இந்திய வெற்றி - சுவையான தகவல்கள்
, சனி, 15 அக்டோபர் 2011 (12:29 IST)
நேற்று இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 126 ரன்களில் வெற்றி பெற்றது, இந்தப் போட்டியின் சில சுவையான புள்ளி விவரங்கள் இதோ:சுரேஷ் ரெய்னா 3,000 ஒருநாள் போட்டி ரனக்ளைக் கடந்த 16வது இந்திய வீரர் ஆவார். அவர் இதுவரை 3,054 ரன்களை 35.51 என்ற சராசரியுடன் 126 போட்டிகளில் எடுத்துள்ளார்.55
பந்துகளில் 61 ரன்களை விளாசிய சுரேஷ் ரெய்னா இங்கிலாந்துக்கு எதிராக 6வது அரைசதக்த்தையும் தன் சொந்தக் கணக்கில் 18வது அரைசதத்தையும் எடுத்தார்.சுரேஷ் ரெய்னா 18 போட்டிகளில் இங்கிலாந்துக்கு எதிராக மட்டும் 602 ரன்கள் எடுத்துள்ளார் சராசரி 40.13.மகேந்திர சிங் தோனி நேற்று அடித்த அரைசதம் அவரது தொடர்ச்சியான 4வது அரைசதமாகும்.இந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் 49.15 என்ற சராசரி வைத்துள்ள தோனி 20 போட்டிகளில் 639 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 5 அரைசதங்கள் அடங்கும்.தோனி இங்கிலாந்துக்கு எதிராக முதல் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். ஒருநாள் போட்டிகளில் அவரக்டு 15வது ஆட்ட நாயகன் விருதாகும் இது.தோனி சர்வதேச போட்டிகளில் 10,000 ரன்களைக் கடந்துள்ளார். அதாவது டெஸ்ட் போட்டிகளில் 3,242 ரன்களையும், ஒருநாள் போட்டிகளில் 6,372 ரன்களையும் இருபது ஓவர் சர்வதேச போட்டிகளில் 459 ரன்களையும் எடுத்துள்ளார்.ஒருநாள் போட்டிகளில் 3,000 ரன்களுக்கும் மேல் அடுத்து சராசரியையும் 50 ரன்கள் பக்கம் வைத்திருக்கும் ஒரே கேப்டன் தோனி மட்டுமே. கேப்டனாக தோனி 108 ஒருநாள் போட்டிகளில் 3,895 ரன்களை 54.85 என்ற சராசரியுடன் எடுத்துள்ளார்.இந்தியா, இங்கிலாந்து ஒருநாள் போட்டிகளில் தோனி 20 கேட்ச்களைப் பிடித்துள்ளார். மேட் பிரையர் இந்தியாவுக்கு எதிராக செய்த சாதனையை இவர் சமன் செய்துள்ளார்.ரவீந்ர ஜடேஜா எடுத்த 3/34 என்பது அவரது இங்கிலாந்துக்கு எதிரான சிறப்பான வீச்சாகும்.வெற்றி பெறும் போட்டிகளில் ஜடேஜாவின் பந்து வீச்சு சராசரி 27 ஆகும். வெற்றி பெற்ற 19 போட்டிகளில் அவர் 26 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.ஒருநாள் போட்டிகளில் 100 கேட்களை பிடிக்கும் கேப்டந்விக்கெட் கீப்பர் தோனியாவார். இவர் இதுவரை 100 கேட்ச்கள் 40 ஸ்டம்பிங்குகளை செய்துள்ளார்.ராஜீவ் காந்தி விளையாட்டரங்கில் 5 போட்டிகளில் இந்தியா நேற்று பெற்ற வெற்றியே முதல் வெற்றியாகும்.ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்துக்கு எதிராக இன்னிங்ஸில் 300 ரன்கள் எடுத்தது இந்தியாவுக்கு இது 8வது முறையாகும்.ஒருநாள் போட்டிகளில் தோனியின் சரசாசரி 50.17 ஆனது. 192 போட்டிகளில் 6,372 ரன்கள் 7 சதம் 42 அரைசதம். மைக்கேல் பெவனுக்கு அடுத்தபடியாக 6000 ரன்களை 50 ரன்கள் சராசரியுடன் எடுத்த வீரராகத் திகழ்கிறார் தோனி.