காதலியை கரம்பிடித்தார் அசோக் டிண்டா
, புதன், 24 ஜூலை 2013 (17:04 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் டிண்டா, தனது காதலியான ஸ்ரேயாசியாவை கரம் பிடித்தார்.இந்திய அணியின் வீரர் அசோக் டிண்டா, வயது 29. வேகப்பந்து வீச்சாளரான இவர் கொல்கத்தாவை சேர்ந்தவர், இந்திய அணிக்காக சமீபமாக விளையாடியவர். ஆனால் சாம்பியன்ஸ் டிராபி, மேற்கிந்திய முத்தரப்பு தொடர்களிலிருந்து இவர் ஓரங்கட்டப்பட்டார். ஜிம்பாவே தொடருக்குக் கூட இவர் பரிசீலிக்கப்படவில்லை.வேகப்பந்துவீச்சாளரான இவர், 13 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில் புனே வாரியர்ஸ் அணிக்காக விளையாடினார்.இந்நிலையில் தனது நீண்ட நாள் காதலியான ஸ்ரேயாசி ருத்ராவை திருமணம் முடித்துள்ளார்.இது குறித்து டிண்டா கூறுகையில், சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் ஸ்ரேயாசியை பார்த்தேன். அதன் பின் நண்பர் மூலம் அவரின் மொபைல் எண் கிடைத்தது.இதன் மூலம் எங்களின் காதல் வளர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தோம். தற்போது இது நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று கொல்கத்தாவில் நடக்கிறது.