இஷாந்த் ஷர்மா புதிய சாதனை - சுவையான புள்ளி விவரங்கள்
, சனி, 15 பிப்ரவரி 2014 (12:19 IST)
இந்திய வேகப்பந்து வீச்சாளர் 25 வயதான இஷாந்த் ஷர்மா 51 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை சாய்த்தார். இது அவரது சிறந்த பந்து வீச்சாகும். இதற்கு முன்பு 2011-ம் ஆண்டு பிரிட்ஜ்டவுனில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் 55 ரன்னுக்கு 6 விக்கெட் எடுத்ததே அவரது நேர்த்தியான பந்து வீச்சாக இருந்தது.
கோரி ஆண்டர்சனின் விக்கெட்டை வீழ்த்திய போது, அது இஷாந்த் ஷர்மா வெளிநாட்டு மண்ணில் பதிவு செய்த 100-வது விக்கெட்டாக பதிவானது. இந்த மைல்கல்லை எட்டிய 8-வது இந்தியர் இஷாந்த் ஷர்மா ஆவார். மொத்தத்தில் அவர் 55 டெஸ்டில் விளையாடி 164 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.
இந்த தொடரில் இஷாந்த் ஷர்மா இதுவரை 15 விக்கெட்டுகளை தன்வசப்படுத்தி இருக்கிறார். இதன்மூலம் நியூசிலாந்து தொடர் ஒன்றில் அதிக விக்கெட்டுகளை அள்ளிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சிறப்பை பெற்றுள்ளார். இதற்கு முன்பு ரமாகாந்த் தேசாய், ஸ்ரீநாத், ஜாகீர்கான் ஆகிய இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தலா 13 விக்கெட் எடுத்ததே இந்த வகையில் அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது.