இந்திய அணியை ஊக்குவிக்க சேவாக் பொன்மொழி
, வியாழன், 28 ஜூலை 2011 (19:55 IST)
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் தோல்விக்குப் பிறகு கிரிக்கெட் பண்டிதர்கள் இந்திய அணி அவ்வளவுதான்... முடிந்து விட்டது என்று எழுதி வரும் நிலையில் துவக்க வீரர் விரேந்திர சேவாக் இந்திய அணியை ஊக்குவிக்கும் விதமாக தனது டுவிட்டரில் பொன்மொழிகள் கூறியுள்ளார்."
பயத்தில் காலத்தைச் செலவழிப்பது என்பது வருமானம் இல்லாமல் ஓவர்-டைம் வேலை பார்ப்பதற்குச் சமம். உங்களைவிட சிறந்தவர்கள் இல்லை, உன்னை நம்பு,எப்போதும் அஞ்சாதே.வெற்றி என்பது கடின உழைப்பு என்ற சக்கரத்தில் ஓடும் வாகனம், ஆனால் தன்னம்பிக்கை என்ற எரிபொருள் இல்லாமல் பயணம் சாத்தியமில்லை."இவைதான் இந்திய அணிக்கான சேவாகின் ஊக்குவிப்பு பொன்மொழிகள்.தோள்பட்டைக் காயம் காரணமாக முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கு விளையாட முடியாத சேவாக் இந்திய அணியை தற்போது டுவிட்டர் பக்கத்தில் தனது தைரிய வார்த்தைகளால் ஊக்குவித்துள்ளார்.சேவாக் இந்தத் தொடரில் இல்லாதது மிகப்பெரிய இழப்பு என்று ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் மேதை இயன் சாப்பல் இந்தத் தொடருக்கு முன்னமேயே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.பின்னர் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரமும், இயன் சாப்பல் பார்வையை வழிமொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.தோனியே கூட சேவாக் ஒரு தாக்கம் செலுத்தும் வீரர் அவரை இழந்திருப்பது மிகப்பெரிய ஏமாற்றம் என்று கூறியிருப்பதும் நினைவு கூறத்தக்கது.