அண்ணன் யூசுப் பத்தானுக்காக காதலியை துறந்த இர்பான் பத்தான்!
, வியாழன், 31 அக்டோபர் 2013 (16:32 IST)
ஒரு காலத்தில் தனது ஸ்விங் பந்து வீச்சினால் ஏகப்பட்ட பேட்ஸ்மென்களை பிரச்சனைக்குள்ளாக்கிய இர்பான் பத்தான் பல பெண்களின் மனதைக் கவர்ந்த அழகராகவும் திகழ்ந்தார்.பலரை வீழ்த்திய இர்பான் பத்தானை ஷிவாங்கி தேவ் என்ற பெண் தனது காதல் வலையில் வீழ்த்தினார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் சில நாட்களுக்கு முன் இர்பான் பத்தான் காதல் இல்லை பிரிந்து விட்டோம் என்றார்.என்னாயிற்று?
ஷிவாங்கி தேவ் என்ற அந்தப் பெண் சி.ஏ. படிப்பு படித்தவர் ஆஸ்ட்ரேலியாவைச் சேர்ந்தவர்.
2003
ஆம் ஆண்டு இந்திய அணி ஆஸ்ட்ரேலியா சென்றபோது இருவரும் காதலிக்க தொடங்கினார்கள். ஷிவாங்கியும் இந்தியா வந்து சேர்ந்தார். வதோதராவில் இவர் 3 ஆண்டுகள் தங்கியிருந்தார். இருவரது பெற்றோரும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இருவருமே தங்களது பெற்றோரை சம்மதிக்க வைத்தனர்.ஆனால் 2012ஆம் ஆண்டு...
இருவரிடையேயும் மனஸ்தாபம் ஏற்பட பிரிந்தனர். இர்பான் பத்தான் தனது அண்ணன் யூசுப் பத்தான் திருமணம் முடிந்த பிறகு நமது திருமணம் என்றார். ஆனால் ஷிவாங்கி தேவ் முன்னதாக திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியதாக தெரிகிறது.