2011 உலகக் கோப்பைக்கு பிறகு அயல்நாட்டில் இந்தியாவின் மோசமான ஆட்டம்!
, வெள்ளி, 31 ஜனவரி 2014 (15:56 IST)
2015
உலகக் கோப்பை போட்டிகளுக்கு இப்போதே யோசிக்க ஆரம்பித்தாகிவிட்டது. ஆனால் அந்தந்த தனித்த போட்டிகளில் வெற்றி பெறவேண்டும் என்பதற்கான உத்திகள் இந்தியாவிடம் இல்லை என்பதே வருத்தத்திற்குரிய விஷயம்.
குறிப்பாக ஆஸ்ட்ரேலியா, நியூசீலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாலு டாப் நாடுகளில் இந்தியாவின் ரெக்கார்ட் வெட்கக் கேடாக உள்ளது. இலங்கை இந்தியாவை விட பெட்டராக உள்ளது என்றே புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.2011
உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்தியாவின் ஒட்டுமொத்த ஒருநாள் போட்டிகள் ரெக்கார்ட் நன்றாக உள்ளது. 75 ஒருநாள் போட்டிகளில் 43 வெற்றி 26 தோல்வி. இது அனைத்து நாடுகளையும் விட நன்றாக உள்ளது. ஆனால் பிரச்சனை அதுவல்ல. வீட்டுல புலி வெளில எலி குறிப்பாக ஆஸ்ட்ரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து நியூசீலாந்தில் இந்தியா சாதுவான பசுவாக இருந்துள்ளது என்பதே இப்போதைய கவலை.
இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற போது பெற்ற 5 வெற்றிகளையும் சேர்த்து இந்த 4 நாடுகளிலும் இந்தியா 8 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது 12-இல் அபாரத் தோல்வி கண்டிருக்கிறது. வெற்றி தோல்வி விகிதம் 0.66. இது இலங்கையைக் காட்டிலும் மோசமாக உள்ளது.