இங்கிலாந்துக்கு எதிராக 1986ஆம் ஆண்டு இதே தினத்தில் மேற்கிந்திய அதிரடி மன்னன் விவ் ரிச்சர்ட்ஸ் 56 பந்துகளில் டெஸ்ட் போட்டியில் சதம் எடுத்து உலக சாதனை நிகழ்த்தினார்.
இங்கிலாந்து ஆஃப் ஸ்பின்னர் ஜான் எம்ப்யூரேவை ஒரு கையில் அடித்த சிகரையும், போத்தம் பந்தை நேராக அடித்த சிகரையும் மறக்க முடியாது.மொத்தம் 7 சிக்சர் 7 பவுண்டரிகளுடன் 58 பந்துகளில் ரிச்சர்ட்ஸ் 110 ரன்கள் எடுத்தார். இவர் எடுத்த இந்த சதம் இரண்டாவது இன்னிங்ஸில். இரண்டாவது 50 ரன்கள் 21 பந்துகளில் எடுக்கப்பட்டது.இந்த டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய அணி 240 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ரிச்சர்ட்ஸின் இந்த சாதனைக்கு நெருங்கி வந்தார் கில்கிறிஸ்ட் இவரும் இங்கிலாந்துக்கு எதிராகத்தன் அடித்தார் ஆனால் கில்கிறிஸ்ட் 57 பந்துகளில் சதம் எடுத்து இரண்டாவது அதிவேக டெஸ்ட் சதத்திற்கு உரியவரானார்.நன்றி யுடியூப்