ஹெலிகாப்டர் ஷாட் நண்பனுக்கு தோனி முக்கிய உதவி!
, செவ்வாய், 16 ஜூலை 2013 (10:40 IST)
இந்திய கேப்டன் தோனி ரசிகர்களுக்கு கிரிக்கெட் விருந்து அளிப்பதில் மட்டும் தாராள மனம் படைத்தவர் அல்ல பிறருக்கு உதவுவதிலும் அவர் தாராளமானவர் என்பதை நிரூபிக்கும் நிகழ்வுதான் இது.அவரது நண்பரும் முன்னாள் ரஞ்சி வீரருமான சந்தோஷ் லால் என்பவருக்கு பெரிய அளவில் மருத்துவ உதவிகளை வழங்கிட செலவுகள் முழுதையும் தோனி ஒப்புக் கொண்டுள்ளார்.நண்பர் சந்தோஷ் லால் கணையம் பாதிக்கப்பட்டு ராஞ்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.இந்த நிலையில் மேல் சிகிச்சைக்கு அவர் டெல்லி மருத்துவமனையில் சேரவேண்டியிருந்தது.இந்நிலையில் டெல்லி மருத்துவமனையில் சேர்க்க தோனி அவருக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்ததோடு செலவுகளையும் தோனியே ஏற்றுக் கொண்டுள்ளார்.தோனியின் ஆட்டத்தில் இன்று உலக அளவில் முத்திரைப்பதித்திருக்கும், வேறு எந்த வீரரும் அதனை போலி செய்ய முடியாததுமான சிறப்பு வாய்ந்த ஹெலிகாப்டர் ஷாட்டிற்கு ஆலோசனை வழங்கியவர் இந்த சந்தோஷ் லால்தான் என்பது குறிப்பிடத்தக்கது.