வினோத் காம்ப்ளி 350 ரன் எடுக்கட்டும்! பரிந்துரை செய்த சச்சின்!
, புதன், 4 டிசம்பர் 2013 (16:27 IST)
ஒரே மண்ணில் பிறந்து ஒரே மைதானத்தில் விளையாடி ஒன்றாக ஊர் சுற்றி வாழ்க்கையில் எல்லா விளையாட்டுகளையும் விளையாடிய இரண்டு நண்பர்களின் பாதை ஒன்று உச்சத்திற்குச் செல்ல மற்றொன்று அவர் உச்சத்தில் ஏறுவதை வேடிக்கைப் பார்ப்பதாக அமைந்ததுதான் வினோத் காம்ப்ளியின் சோகமான கிரிக்கெட் வாழ்க்கை.
1988
ஆம் ஆண்டு மும்பை ஹேரிஸ் ஷீல்ட் அரையிறுதிப் போட்டியில் காம்ப்ளியும், சச்சினும் இணைந்து 664 ரன்கள் எடுத்தது இன்று இந்தியாவில் நாட்டார் கதையாகியுள்ளது.அப்போது ஒரு சம்பவம்... அது சுவையான சம்பவம்... காம்ப்ளி 349 நாட் அவுட், சச்சின் டெண்டுல்கர் 326 நாட் அவுட். ஆனால் இருவரும் பயிற்சியாளர் கொடுத்த உத்தரவை மீறி விளையாடிக் கொண்டேயிருந்துள்ளனர். இருவரது பயிற்சியாளர் ராம்கந்த் அச்ரேக்கர் அப்போது மைதானத்தில் இல்லை. அவரது உதவியாளர் லக்ஷ்மண் சவான் இருந்தார்.
அதாவது லஷ்மண் சவான் டிக்ளேர் செய்ய உத்தரவிட்டார். ஆனால் சிறுவர்களான வினோத் காம்ப்ளியும், கேப்டன் சச்சின் டெண்டுல்கரும் சொல் பேச்சு கேட்கவில்லை.