Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரோகித் காட்டடி தர்பார்! சில சுவையான புள்ளிவிவரங்கள்!

ரோகித் காட்டடி தர்பார்! சில சுவையான புள்ளிவிவரங்கள்!
, ஞாயிறு, 3 நவம்பர் 2013 (12:51 IST)
நேற்று பெங்களூரில் இந்திய துவக்க வீரர் ரோகித் சர்மா அசாத்தியமான ஒரு இன்னிங்ஸை ஆடினார். 158 பந்துகளில் 12 பவுண்டரிக 16 சிக்சர்கள் சகிதம் அவர் எடுத்த இரட்டை சதம் கிரிக்கெட் அரங்கில் பெரும் குதூகலத்தை ஏற்படுத்தியுள்ளது.
FILE

நேற்றிய இன்னிங்சின் சில புள்ளிவிவரங்கள் இதோ:

ரோகித் சர்மாவின் 158 பந்து 209 ரன்கள் இதற்கு முந்தைய 2 இரட்டை சதங்களை விட மெதுவானது! சேவாகின் 219 ரன்கள் 149 பந்துகளில் எடுக்கப்பட்டது. சச்சின் தென் ஆப்பிரிக்காவை வறுத்த 200 ரன்கள் இன்னிங்ஸ் 147 பந்துகளில் வந்தது.

ரோகித் அடித்த 16 சிக்சர்கள் புதிய உலக சாதனையாகும். இதற்கு முன்னர் வாட்சன் மிர்பூரில் வங்கதேசத்திற்கு எதிராக 185 நாட் அவுட்டில் 15 சிக்சர்களை விளாசியிருந்தார்.

சச்சின்...

தனது 200-இல் 3 சிக்சர்களையே அடித்தார். சேவாக் 219-இல் 7 சிக்சர்களை விளாசினார். ரோக்த் இருவரையும் சேர்த்த சிக்சர்களைக் காட்டிலும் அதிகம்!
webdunia
FILE

ரோகித்தின் நேற்றைய இன்னிங்ஸின் முதல் 50 ரன்கள் 71 பந்துகளில் வந்தது. இதில் அவர் 24 சிங்கிள், 3பவுண்டரி ஒரு சிக்ஸ். ரன் இல்லாத பந்துகள் 39. இதற்கு நேர் எதிரிடையாக கடைசி 59 ரன்கள் 18 பந்துகளில் விளாசப்பட்டுள்ளது இதில் 7 சிக்சர்கள் 3 பவுண்டரிகள்.

ரோகித் சர்மா 150 ரன்கள் எடுத்திருந்தபோது 27 பந்துகளே ஆட்டத்தில் மீதமிருந்தன. இதில் இரட்டை சதம் நினைத்து பார்க்க முடியாது. ஆனால் அவர் 18 பந்துகளை எதிர்கொண்டு சாதனை நிகழ்த்தினார். தோனி 9 பந்துகளில் 32 ரன்களை விளாசினார்.

ஆஸ்ட்ரேலிய ஸ்பின் பந்து வீச்சில் மட்டும் 45 பந்துகளில் ரோகித் 79 ரன்களை விளாசினார் நேற்று.

ஒரே தொடரில்....

அதிக ரன்களை அடித்த வீரரும் ரோகித் ஆவார். அவர் இந்த தொடரில் 5 போட்டிகளில் 491 ரன்கள் விளாசினார். இவருக்கு அடுத்த படியாக ஆஸி. கேப்டன் பெய்லி. இவரும் இதே தொடரில் 478 ரனகள் எடுத்துள்ளார்.
webdunia
FILE

5வது விக்கெட்டுக்காக ரோகித்த்தும், தோனியும் சேர்த்த 167 ரன்களின் ஸ்ட்ரைக் ரேட் 10.65 என்று இருந்தது. 150 ரன்களுக்கு அதகமான எந்த ஒரு பார்டர்ஷிப்பிற்குமான 3வது மிகப்பெரிய ஸ்டரைக் ரேட் இதுவாகும். இரண்டாவது எது என்று கேட்கிறீர்களா? ரோகித், வீரத் கோலி ஜெய்ப்பூரில் நடத்திய படையலில் 186 ரன் பார்ட்னர்ஷிப் ஸ்ட்ரைக் ரேட் 10.73 அல்லவா?

350 ரன்கள் மற்றும் அதற்கு மேல் ரன்களைக் குவிப்பது ஒருநாள் போட்டிகளில் 63 முறை நடந்தேஏறியுள்ளது. இதில் இந்தியா மட்டும் 19 முறை 350 ரன்களைக் கடந்துள்ளது. தென் ஆப்பிரிக்கா 13 முறையும், ஆஸ்ட்ரேலியா 11 முறையும் இதனைச் செய்துள்ளது.

கடைசி 6 ஓவர்களில் 115 ரன்கள் எடுக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டு டெஸ்ட் விளையாடும் நாடுகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டியில் இப்படி நிகழ்ந்ததில்லை.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil